சென்னை, அக்.27 தமிழ்நாடு சிறைத்துறையின் வரலாற்றில் அவ்வப்போது சில தப்பியோட்டச் சம்பவங்கள் அரங்கேறியிருந்தாலும், ஒரே நேரத்தில் பல கைதிகள் திட்டமிட்டு தப்பிய நிகழ்வுகள் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கையே உலுக்கியுள்ளன.
தேனி கிளைச் சிறையிலிருந்து தப்பியோட்டம்
(அக்டோபர் 26, 2026)
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து நேற்று (26.10.2026) நள்ளிரவில் 17 விசார ணைக் கைதிகள் ஒன்று சேர்ந்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ்நாட்டின் வரலாற்றில் இரண்டாவது பெரிய தப்பியோட்ட நிகழ்வாகும்.
போலி வலிப்பு நாடகம்
ஒரே அறையில் அடைக்கப்பட்டி ருந்த விசாரணைக் கைதிகள், தங்களோடு இருந்த ஒருவருக்கு திடீரென உடல்நலம் குன்றி வலிப்பு (Epileptic Seizure) வந்துவிட்டதாகக் கூறி கூச்சலிட்டனர். மனிதாபிமான அடிப்படையில் காவலர் தங்கப் பாண்டி என்பவர் கதவைத் திறந்து அறைக்குள் சென்றார். அந்த நொடியில், வலிப்பு வந்ததாக நடித்த கைதி உள்பட, அனைவரும் சேர்ந்து காவலரைத் தாக்கினர். காவலருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சிறையின் முக்கியக் கதவு வழியாக 17 கைதிகளும் தப்பி யோடினர்.
காவல்துறை நடவடிக்கை
சம்பவம் நடந்த உடனே தென் மண்டல அய்ஜி விஜயேந்திர பிதாரி, தேனி எஸ்.பி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சிறைத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்தியா ளர்களிடம், கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள அண்டை மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல் மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதிகளில் 16 சோதனைச் சாவடிகள் அமைக்கப் பட்டு தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக, பிரவீன் குமார், சிலம்பரசன், ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகிய 4 கைதிகள் இன்று (27.10.2026) காலையிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மீதமுள்ள 13 கைதிகளைப் பிடிக்க வனப்பகுதிகள் மற்றும் முக்கியச் சந்திப்புகளில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வரு கிறது என்று கூறினார்.
சிறைத்துறையின் கண்காணிப்பு நடைமுறைகளில் ஏற்படும் சிறிய இடைவெளியைக் கூட கைதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர் என்பது உலகளவில் நடப்பது என்று தெரிந்தும், தேனி கிளைச் சிறை நிகழ்வில், உடனடி நாடகம் ஒன்றைப் போட்டு காவலரின் கவ னக்குறைவைப் பயன்படுத்தித் தப்பியுள்ளனர்.
சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து கடந்த அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் 24 மணி நேர இடைவெளியில் இரண்டு கைதிகள் தப்பியோடினர். அடுத்த சில நாள்களிலேயே காவல்துறை யினரால் மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வு நடந்த ஒரு வார இடைவெளியில், தேனி மாவட்டத்தில் நடந்துள்ள 17 சிறைக் கைதிகள் தப்பியோடிய நிகழ்வு சிறைத் துறை பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
‘எக்ஸ்’ தளப் பதிவு!
இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளி யிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில்,
‘‘போதைப் பொருள் கடத்து வதைத் தொடர்ந்து (Breaking Bad); தமிழ்நாட்டில் சிறை தகர்ப்பும் (Prison Break)-ம் தொடங்கிவிட்டது!
பிணையில் வெளிவரும் குற்ற வாளிகளைத்தான் கண்காணிப்ப தில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதி களையும் தப்பிக்க விடும் இலட்ச ணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடு களும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026 இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்ற வாளிகள் சுதந்திரமாகக் குற்றங்க ளைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உத வாத அரசாக இந்த த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது’’ என்று தனது ‘எக்ஸ்‘ தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிறைக் கைதிகள் தப்பியது குறித்து, தமிழ்நாட்டில் உள்ள பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
