சென்னை, ஆக. 24- சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலை மையகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று (23.8.2026), செய்தியாளர் களிடம் கூறியதாவது:-விடுதலைப் போராட்ட வீரர் என்கின்ற முறையில் நல்லகண்ணுவிற்கு அரசு ஒதுக்கிய வீட்டை, அவரது விருப்பப்படி அரசிடமே திரும்ப ஒப்படைக்கிறோம். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி, டெல்டா மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 28ஆம் தேதி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்த இருக்கிறோம்.
பணிநிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அன்றைய நாளில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இடதுசாரி மாணவர் அமைப்புகளைக் கண் காணித்தல் தொடர்பான சுற்றறிக்கைக்கு முதல மைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும். மேகதாது அணை கட்டக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
சட்டமன்ற உறுப் பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். டில்லி பேரணிக்காக தமிழ் நாட்டில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயிலுக்கு ஒன்றிய அரசு அனுமதி தர மறுத்துவிட்டது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

