23.2.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஆதிக்கத்தை அப்புறப்படுத்த வேண்டும், ராகுல் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அக்கப்போர் செய்வதை விடுத்து ஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப்போகிறார்? அமைச்சர் க.பொன்முடி கண்டன அறிக்கை.
* மார்க்ஸ் குறித்து சர்ச்சை கருத்து ஆளுநர் மாளிகை முன் 28இல் கருப்புக்கொடி போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு
தி டெலிகிராப்:
* அதானி பங்குச் சரிவு: ஆஸ்திரேலிய ஓய்வூதிய சேமிப்புகளில் பத்து மில்லியன்கள் ஆபத்தில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
* ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மேனாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்த விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ள ஜவஹர் சர்கார், 2002 குஜராத் கலவரம் குறித்து “எஸ். ஜெய்சங்கரின் தந்தை கே.சுப்ரமணியம் கூறு கையில், ‘தர்மம் குஜராத்தில் (2002 கலவரம்) கொல்லப் பட்டது. அப்பாவி மக்களைப் பாதுகாக்கத் தவறியவர்கள் அதர்மக் குற்றவாளிகள். ராமர்… குஜராத்தின் அசுரர் ஆட்சி யாளர்களுக்கு எதிராக தனது வில்லைப் பயன்படுத்தி யிருப்பார்” என்று 2002 ஆம் ஆண்டின் கட்டுரையை மேற்கோள் காட்டி ட்வீட் செய்துள்ளார்.
– குடந்தை கருணா