டாக்கா, அக். 26- தங்கள் நாட்டைச் சேர்ந்த இருவருக்கு சவூதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து வங்கதேசம் விளக்கம் கேட்டுள்ளது.
வங்கதேசத்தில் இருந்து வேலைக் காக சவூதி அரேபியாவுக்கு சென்ற ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு கடந்த 14ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்கள் மசூதி ஒன்றில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டி இந்த மரண தண்டனை அளிக்கப் பட்டதாக சவூதி அரேபியா அறிவித்தது. உலகில் அதிக மரண தண்டனை நிறைவேற்றும் நாடான சவூதியில் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள்தான் அதிகம் இத்தண்டனைக்கு உள்ளாகி வருகின்றனர்.
தங்களுக்கு முறைப்படி தகவல் ஏதும் தெரிவிக்காமல் வங்கதேச குடிமக்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது அந்நாட்டு அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சவூதி அரசிடம் விளக்கம் கேட்டு அந்நாட்டில் உள்ள வங்கதேச தூதரகம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், ‘அந்த இருவர் மீதான குற்றச்சாட்டு என்ன?, நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம், அவர்களுக்கு எவ்வாறு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது? அவர்களின் உடல்கள் எங்கே உள்ளன?, அவர்களுக்கு உரிய சட்டவாய்ப்புகள் வழங்கப்பட்டதா?’ என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
