சென்னை – அரக்கோணம் ஏ.சி. ரயிலில் கட்டணம் மிக அதிகம்! பயணிகள் அதிருப்தி

1 Min Read
- Advertisement -

சென்னை, அக்.25- சென்னை மத்திய ரயில் நிலையம், ஆவடி மற்றும் அரக்கோணம் இடையே புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள குளிர்சாதன (ஏசி) புறநகர் மின்சார ரயில் சேவையின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகப் பயணிகள் பெரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சென்னை – அரக்கோணம் ஏ.சி. ரயில் கட்டணம் ரூ.230

23.10.2026 அன்று முதல் பயன்பாட்டிற்கு வந்த இந்த ஏசி மின்சார ரயிலில், அரக்கோணத்தில் இருந்து சென்னை மத்திய ரயில் நிலையத்திற்குச் செல்ல ரூ.230-ம், ஆவடியில் இருந்து அரக்கோணம் செல்ல ரூ.200-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயங்கும் ஏ.சி. மின்சார ரயிலில் 59 கி.மீ. தூரத்திற்கு முழுப் பயண கட்டணமாக ரூ.105 மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், புதிய வழித்தடத்தில் 68 கி.மீ. தூரத்திற்கு ரூ.230 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.

வரும் டிசம்பர் 24ஆம் தேதி வரை 2 மாத காலத்திற்குச் சோதனை அடிப்படையில் இந்த சேவை இயக்கப்படுகிறது. வார நாட்களில் சென்னை மத்திய ரயில் நிலையம், ஆவடி மற்றும் அரக்கோணம் இடையே 3 ஜோடி ஏ.சி. ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

முன்னதாக சென்னையில் முதன்முறையாக கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏ.சி. மின்சார ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தூரத்திற்கு ஏற்ப ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய வழித்தடத்தில் கட்டணம் மிக அதிகமாக உள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ள ரயில் பயணிகள், அந்த கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *