மாதவரம் க.கலைச்செல்விக்கு கழகத் துணைத் தலைவர் இறுதி மரியாதை

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 24- வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் துணைத் தலைவர் கருங்குழி கண்ணனின் இணையரும், கழக நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் தனது இணையருடன் பங்கேற்றுக் கழகப் பணியாற்றியவருமான கழக மகளிரணித் தோழர் க.கலைச்செல்வி 20.10.2026 அன்று காலை 10 மணி யளவில் உடல் நலக் குறை வால் மறைவுற்றார்.

அன்று (20.10.2026) பிற்பகல் 3 மணிக்கு, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மறைவுற்ற அம்மையாரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், திருப்பூர் வழக்குரைஞர் ஆ.பாண்டியன், வட சென்னை மாவட்ட கழகச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாவட்ட கழகக் காப்பாளர் கி.இராமலிங்கம், கழகப் பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, வா.விமலாதேவி, ம.கயல், செங்கை மதிவாணன், கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ.தங்க மணி, மாதவரம் கழக அமைப்பாளர் சி.வாசு, அரும்பாக்கம் சா.தாமோ தரன், க.கலைமணி, மகேஷ் மற்றும் தோழர்கள் பலரும் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.

மாதவரம் பகுதி தி.மு.க. செயலாளர் துக்காராம், 25ஆம் வட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவரு மான எஸ்.நந்தகோபால், கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் கு.ஜீவா, எருக்கமாநகர் கழக அமைப்பாளர் சொ.அன்பு, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சித் தோழர்கள், அலெக்சு நகர் குடியிருப்போர் சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

21.10.2026 காலை 10 மணிக்கு மாதவரம் இடுகாட்டில் அம்மை யாரது இறுதி நிகழ்வு எவ்வித மூடச்சடங்கு களுமின்றி  நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *