சின்ன காஞ்சிபுரத்தில் கி.பி. 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பக்கல் கண்டுபிடிப்பு!

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 23- சின்ன காஞ்சிபுரம், தும்பவனத்தம்மன் கோயிலில், சென்னை தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மு.அன்பழகன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அக்கோயிலில் கி.பி.11ஆம் நூற்றாண்டை சேர்ந்த போர்வீரன் சிற்பக்கல் ஒன்றை கண்டுபிடித்தார். அவரது, கண்டுபிடிப்பின்போது காஞ்சிபுரம் அருங்காட்சிய காப்பாட்சியர் சு.உமாசங்கர், கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் ச.விமல்தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து, பேராசிரியர் மு.அன்பழ கன் கூறியதாவது: இச்சிற்பமானது போரிலோ அல்லது தன் சமூகத்தை காப்பாற்றும் போராட்டங்களிலோ உயிர்நீத்த வீரர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் ஆகும். இவற்றை வீரக்கற்கள் என்றும் சொல்வார்கள். கம்பீரமான தோற்றத்துடன் இடதுபக்கம் திரும்பி நிற்கும் இவரின் இடது கால் முன்னோக்கியும், வலது காலின் முன் பாதம் தரையில் ஊன்றியும், பின்பாதம் தரையில் ஊன்றாமலும் முன்னோக்கி நகர உந்து வதுபோல உள்ளது. இடது கையில் இருக்கும் கேடயம் வட்டமாக உள்ளது. எதிரில் போர் செய்யும் வீரனின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக உயர்த்திப் பிடித்தப்படி அமைந்துள்ளது. வலது கையில் உள்ள உயர்ந்த வாள் எதிரில் உள்ள பகை வீரனை வீழ்த்துவதற்காக உயர்த்திப் பிடித்தப்படி உள்ளது.

பட்டாடையின் முடிச்சுத் தொங்கல்கள் இரு கால்களுக்கும் இடை யில் சிறிய அளவிலும், இடது காலின் முட்டிக்கு கீழ்ப்பகுதி வரையிலும் நீண்டு தொங்குகிறது. இடையின் வலது பகுதியில் குறுவால் ஒன்று மிகச்சிறிய அளவில் காணப்படுகிறது. கல்வெட்டு எழுத்துக்கள் எதுவும் இல்லாத இந்த சிற்பத்தின் காலம் கி.பி.11ம் நூற்றாண்டாக இருக்கலாம், என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *