வாக்குத் திருட்டு நிரூபிக்கப்பட்ட உண்மை : பொய்களால் திசை திருப்பப் பார்க்கிறது பா.ஜ.க.!

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக்.23 தேர்தலில் வாக்குத் திருட்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை என்றும், பிரான்சு கலவரங்களுக்கும் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரிய போராட்டங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, பாஜக தரப்பு பொய்கள் மூலம் சூழலை திசைதிருப்ப முயல்வதாகவும் காங்கிரஸ் கட்சிக் கண்டனம் தெரிவித்துள்ளது.

முக்கியக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளப் பதிவு விவரங்களில் தெரிவித்ததாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 10 கோடிக்கும் அதிக மானோர் தங்களது அரசியலமைப்புச் சட்டப்பூர்வமான வாக்களிக்கும் உரிமையை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். புதிய வாக்காளர்கள் இணைவதற்குத் தடைகளை உருவாக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ‘படிவம் 6’-அய்ச் சட்டவிரோதமாகத் திருத்தியுள்ளது. மேலும், குறிப்பிட்ட சில வாக்காளர்களைக் குறிவைத்து நீக்குவதற்காக ‘படிவம் 7’ தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு இது வழிவகுத்துள்ளது.

அனைத்துச் சட்டப் பாது காப்புகளையும் மீறி, வாக்காளர் பட்டியலின் மீதான முழுமையான கட்டுப்பாட்டைத் தன்வசப்படுத்த தேர்தல் ஆணையம் ‘ECINet’ முறையைப் பயன்படுத்தியுள்ளதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மக்கள் கோபத்தையும் சீற்றத்தையும் அடக்குமுறைகளைக் மீறிப் போராட்டங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையேயான கூட்டு அம்பலப்பட்டுள்ளதாகவும், தங்களின் விரக்தியையும் பதற்றத் தையும் மறைக்கப் பொய்களைப் பரப்புவதே பாஜகவின் இயல்பான செயல் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க எவ்வளவு முயன்றாலும் பாஜகவின் திசைதிருப்பும் முயற்சிகள் வெற்றி பெறாது என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *