ஆத்தூர், அக்.23 ஆத்தூரில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளினை யொட்டி, பெரியார் குடும்பங்கள் ஒன்று கூடல் – குடும்ப விருந்து விழா சிறப்புடன் நடைபெற்றது. இவ்விழாவில், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அதன் விவரம் வருமாறு:
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு ஆத்தூரில் பெரியார் குடும்பங்கள் ஒன்று கூடல் மற்றும் குடும்ப விருந்து விழா தென்னங்குடிபாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஏவிபி மகாலில், 18.10.2026 அன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் அ. சுரேஷ் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் நீ. சேகர் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். மாவட்டக் காப்பாளர்கள் த. வானவில்,
இரா. விடுதலை சந்திரன் மேட்டூர் மாவட்டக் காப்பாளர் கவிஞர் சுப்பரமணியம், சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜீ, மாவட்டச் செயலாளர் சரவணன், ஆத்தூர் நகரத் தலைவர் வெ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வருகை தந்த அனைவரையும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என கூறி, தோழர்களும் தங்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

தொடக்கவுரை
மேட்டூர் மாவட்டக் காப்பளரும் பெரியார் பெருந்தொண்டருமான பழனி புள்ளையண்ணன் உரையாற்றுகையில், ‘‘நான் இந்த இயக்கத்திற்கே வந்தது ஒரு குடும்ப விழாவின் மூலமாகத் தான். அந்த வகையில், இந்தப் பகுதி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள், பல தியாகச் சீலர்கள் உள்ள பகுதி’’ என்று நினைவுபடுத்திப் பேசினார்.
மாவட்டக் காப்பாளர் த. வானவில் உரையாற்று கையில், ‘‘இந்தச் சமுதாயம், தந்தை பெரியார் அவர்களால் மேன்மை பெற்றிருக்கிறது. அதனால் இன்று வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. ஆகையால், நாம் அனைவரும் இந்த நிகழ்வை விழாவாகக் கொண்டாட வேண்டும்’’ எனக் கூறினார்
கழகப் பொதுச்செயலாளருக்கு நன்றி!
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துப் பேசுகையில், ‘‘கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பல்வேறு பணி களுக்கிடையில், ஆத்தூருக்கு வருகை தந்தமைக்கு, நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்’’ எனக் கூறினார்.

முதலாவதாக,
‘‘மந்திரமா தந்திரமா?’’
காப்பாளர் இரா. விடுதலை சந்திரன், ‘‘மந்திரமா தந்திரமா?’’ நிகழ்ச்சியை நடத்தினார்.
இதில் பல புதிய தகவல்களை சாமியார்கள், மந்திரவாதிகள் எப்படியெல்லாம் நம் மக்களை ஏமாற்று கிறார் என்பதை பல தந்திரமான மந்திர நிகழ்ச்சிகளை கண் முன்னே செய்து காட்டினார்.
இதை வருகை தந்த அனைவரும், ஆர்வமுடனும், ஆச்சரியத்துடனும் கண்டு மகிழ்ந்தார்கள்.
மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மாநில ப.க. அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன், மாவட்ட ப.க. தலைவர் வ. முருகானந்தம், மாவட்ட ப.க. செயலாளர் அ.அறிவுசெல்வம் விளையாட்டுப் போட்டிகளை வழி நடத்தினர். முதலாவதாக மகளிருக்கான பலூன் ஊதும் போட்டி நடைபெற்றது. அதில் குயிலி முதல் பரிசையும், அனநியா என்ற மாணவி இரண்டாம் பரிசையும் பெற்றனர்.
இரண்டாவதாக, குறு நாடகம்
‘‘பிரம்மாவும் வேண்டாம், அவர் படைத்த ஜாதியும் வேண்டாம், எங்கள் மாட்டைக் கொஞ்சம் மேயுங்கள்’’ என்ற தலைப்பில் மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வியால் பயிற்றுவிக்கப்பட்டு நாடகம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்குக் கழகப் பொதுச்செயலாளர் வாழ்த்துகளை கூறி, பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார்.
மூன்றாவதாக, நினைவாற்றல்
திறன் போட்டி!
தந்தை பெரியார் பெயரில் ஓர் அணியாகவும், அன்னை மணியம்மையார் பெயரில் ஓர் அணியாகவும், ஒவ்வொரு அணியிலும் ஏழு, ஏழு நபர்களைப் பிரித்து, நினைவாற்றல் திறன் போட்டி நடைபெற்றது. பெரியார் அணிக்கு தந்தை பெரியார், டாக்டர் அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கல்வி வள்ளல் காமராஜர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய பெயர்களும்,
அதேபோல மணியம்மையார் குழுவிற்கு, அன்னை மணியம்மையார், அன்னை நாகம்மையார், கண்ணம்மாள், மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பி.டி.உஷா, சானியா மிர்ஸா, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மூ, கவுரி லங்கேஷ், நஜ்மா ஹெப்துல்லா, வீரமங்கை வேலுநாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை போன்றவர்களின் பெயர்களும் வைக்கப்பட்டன.

இதில் எந்த அணி அதிகமாகத் தலைவர்களின் பெயர்களைத் திரும்பத் திரும்ப ஒரே பெயரைக் கூறாமல், அதிகமான பெயர்களைக் கூறும் அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும் என்றனர்.
அன்னை மணியம்மையார் அணி வெற்றி!
இந்த இரு அணிகளுக்கும் சே.ஜான்சி ராணி ஒரு தலைவராகவும், ச.தமிழ்மதி ஒரு தலைவராகவும் இருந்து மதிப்பெண் வழங்கினர். நிறைவாக அன்னை மணியம்மையார் அணி 13 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களையும் அழைத்துப் பொதுச்செயலாளர் பாராட்டினார்.
நான்காவதாக, மகளிருக்கான இசை நாற்காலிப் போட்டி நடை பெற்றது. இதில் குயிலி முதல் பரிசை யும், இரண்டாம் பரிசை அய்ந்தாம் வகுப்பு மாணவி அனநியாவும் தட்டிச் சென்றனர்.
கழகப் பொதுச்செயலாளர்
வீ.அன்புராஜ் சிறப்புரை
கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் வீ. அன்பு ராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தமது சிறப்புரையில், ‘‘சென்ற ஆண்டு சேலத்தில் குடும்ப விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இங்கு இருக்கும் காப்பாளர்கள் எல்லாம் கலந்து கொண்டனர். அப்போதுதான் இதை மீண்டும் நாடு முழுவதும், குடும்ப விழாவாக நடத்த வேண்டும் என திட்டமிட்டேன். அந்த வகையில், நம் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழாவில், முடிவு செய்தோம்.

இனி வருங்காலங்களில்
நமது பிள்ளைகள்
நம் இயக்கத்தின் தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இங்கு ஏராளமான தோழர்கள் குடும்பத்துடன் மகளிர், மாணவர்கள், குழந்தைகளை அழைத்து வந்தமைக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
ஏனென்றால் ஒவ்வொரு குடுமபத்திலும் எவ்வளவு வேலைப் பளு இருக்கும் என்பதை நான் அறிவேன். நமது கழகத் தோழர் ஒருவர் ஜெர்மனியில் அவரது பிள்ளையைப் படிப்பதற்காக அனுப்பியுள்ளார். அதை நம்மிடம் வந்து கூறி, ‘‘நமது கழக உறவுகள் யாராவது அங்கு உள்ளார்களா? அப்படி இருந்தால், அது எனது பிள்ளைக்கு உதவியாக இருக்கும்’’ என்றார். உடனே அங்கிருக்கும் நமது தோழர்களை அழைத்துப் பேசும்போது, கொள்கைக் குடும்பங்கள் அங்கு ஏராளமாக இருக்கிறார்கள் என்பதை அவர் தெரிந்து கொள்ள முடிந்தது.
உலகம் முழுவதும்
நமது கொள்கைக் குடும்பத்தினர் வாழ்கிறார்கள்!
ஆகையால், உலகம் முழுவதும் நமது கொள்கைக் குடும்பத்தினர் வாழ்கிறார்கள். அப்படி நாம் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள, நாம் நமக்குள் உதவிகளைப் பெற ஒரு வாய்ப்பாக அமையும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்.
தந்தை பெரியார் அவர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்பே ‘‘இனி வரும் உலகம்’’ என்ற புத்தகத்தில், நாம் இன்று பயன்படுத்தும் சாதனங்கள் யாவும், எதிர்காலத்தில் வரும் என்று கணித்தார். இதை நமது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கூட எடுத்துக் காட்டியுள்ளார்’’ எனக் கூறி, மேலும் ஏராளமான தகவல்களை எடுத்துக் கூறினார். ‘‘இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி, பாராட்டுகள்; அடுத்த ஆண்டுக்கான செயல் திட்டங்களை, இப்போதே செய்யத் தொடங்குங்கள்’’ என்றார்.
பங்கேற்றோர்
மாவட்டத் தலைவர் சுரேஷ், கருத்தம்மா, தமிழ்மதி, நீதியரசன், மாவட்டச் செயலாளர் நீ. சேகர், முத்து லட்சுமி, செந்தமிழ் சேரன், ஜான்சி ராணி, கிஷோர், தேவா, தாண்டாயி, கார்த்திகா, பிரேமா, அனநியா, மாநில ப.க. அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன், சத்யா, இளநிலவன், யாழ் இனியன், ப.க. மாவட்டத் தலைவர் வ.முருகானந்தம், ஜானகி, குறளமுது, ப.க. மாவட்டச் செயலாளர் அ. அறிவுச்செல்வம், மீனா, மதிவதனி, அன்புவில், அகிலன், மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.கார்முகிலன், ஜெய பாரதி, பெரியார் பிஞ்சு ஆதித், கிரிதிஷ், புத்திர கவுண்டம்பாளையம் கூ.செல்வம், குயிலி, நல்ல தம்பி, குமரன், அரவின், சம்பத், தம்மம்பட்டி நகரத் தலைவர் வீராசாமி, தர்ஷ்வந்த், சாரு தர்ஷ்னா, கோபி இமயவர்மன், மெடிக்கல் மு. மனோகரன், விஜய்ஆனந்த், ஆ.செல்வம், இலுப்பநத்தம் கா.பெரியசாமி, வேப்பம்பூண்டி இளங்கோவன், பழனிவேல், கம்யூனிஸ்ட் ராமகிருஷ்ணன், பெத்த நாயக்கன்பாளையம் சீனிவாசன், முரளி, ரமேஷ், தென்னங்குடிபாளையம் ஜெயராமன், சிலோன், தலைவாசல் பகுதி தோழர்கள் காளிதாஸ், பெரியசாமி, துரை, ரமேஷ், தமிழ் மற்றும் சேலம் மாவட்டக் கழகத் தோழர்கள் ஓமலூர் ஒன்றியத் தலைவர் சவுந்தரராசன், பேங்க் ராஜீ, பொதுக்குழு உறுப்பினர் கமலம், பரமசிவம், போலீஸ் ராஜீ, மருத்துவர் ராஜேந்திரன், வெண்ணந்தூர் செல்வகுமார், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் பாஸ்கர், மருத்துவரணி பொறுப்பாளர் குமார், பெரம்பலூர் ப.க. மாவட்டத் தலைவர் நடராஜன், மாவட்டச் செயலாளர் ஜெயந்திரன், மற்றும் செந்தில் குமார், திமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு பொறுப்பாளர் ஆடிட்டர் ஆனந்த் மற்றும் தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
