இது என்ன காட்டுமிராண்டித்தனம்? இன்ஸ்டாகிராம் பிரபலத்துடன் பேசிய பெண்ணைச் சாணி ஊற்றி துடைப்பத்தால் அடித்த கொடுமை!

1 Min Read
- Advertisement -

காரைக்குடி, அக். 22– காரைக்குடியில் தனது கணவரான ‘இன்ஸ்டாகிராமில்’ பிரபலமானவருடன் பேசிய இளம்பெண் மீது சாணியை ஊற்றி, துடைப்பத்தால் அடித்து அவமரியாதை செய்ததாக 3 பெண்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்குடி திலகர் நகரைச் சேர்ந்தவர் ஜெயசிறீ (20). இவர் கணேசபுரத்தைச் சேர்ந்த அபிநயாவின் (23) கணவர் கவியரசனிடம் ‘இன்ஸ்டாகிராமில்’ அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. எனவே கவியரசன் அபிநயாவிடம் பேசுவதில்லை.

20.10.2026 அன்று ஜெயசிறீ தனது தோழியுடன் காரைக்குடி 100 அடி சாலையில் சூடாமணிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை அபிநயா, அவரது சகோதரி அருணாதேவி (27), தோழி பிரியா (30) ஆகியோர் வழிமறித்தனர்.

தொடர்ந்து, அவர்கள் ஜெயசிறீ மீது சாணியை கரைத்து ஊற்றியதுடன், அவதூறாக பேசி, துடைப்பத்தால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பலரது முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதாக ஜெயசிறீ அளித்த புகாரின் பேரில் அபிநயா, அருணாதேவி, பிரியா ஆகியோர் மீது காரைக்குடி வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *