மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு!

- Advertisement -

மேட்டூர், அக். 19- ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதுகுறித்த விரிவான செய்தியில் கூறப்பட்டதாவது:

ஒகேனக்கல் காவிரியில் கடந்த இரண்டு நாட்களாக விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, திடீரென அதிகரிக்கத் தொடங்கியது.ஞாயிறு  மாலை நிலவரப்படி 3,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று  (18.10.2026) காலை விநாடிக்கு 6,500 கனஅடியாக மேலும் உயர்ந்தது.

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்திருந் தாலும், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மாறிக்கொண்டே இருக்கிறது: 17.10.2026 அன்று மாலை மேட்டூர் அணைக்கு 498 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து விநாடிக்கு 4,738 கனஅடியாக பதிவானது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட, டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மிக அதிகமாக உள்ளது. தற்போது அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மளமளவெனச் சரிந்து வருகிறது: சனிக்கிழமை 56.09 அடி ஞாயிறு மாலை: 55.31 அடி தற்போதைய நீர் இருப்பு: 21.32 டிஎம்சி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *