குழந்தைகளின் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை! முழுமையான தடை விதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் உத்தரவு!

- Advertisement -

புதுடில்லி, அக். 19- குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரியும், குழந்தைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்த அடிப்படை உரிமை உள்ளதா என்பது குறித்தும் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்து முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

“குழந்தைகள் உட்பட ஒவ்வொரு தனிநபருக்கும் இணையத்தை அணுகுவதும், பயன்படுத்துவதும் அடிப்படை உரிமையாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 (வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம்) மற்றும் பிரிவு 19(1)(a) (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்) ஆகியவற்றின் கீழ் இந்த உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு இணைய உரிமையை முற்றிலுமாக மறுப்பது அபத்தமானது. வயது வித்தியாசமின்றி குழந்தைகளுக்கும் உரிமைகள் உண்டு. குழந்தைகளின் பாதுகாப்பும் அவர்களது சுதந்திரமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல; இரண்டும் உறுதி செய்யப்பட வேண்டும்.

சட்டத்தில் தடை விதிப்பதால் மட்டுமே குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட மாட்டார்கள். மேலும், தங்களை போன்ற மற்றவர்களுடன் தோழமையை வளர்த்துக்கொள்ள இணையமே பெரும்பாலும் முதன்மை இடமாக உள்ளது. எனவே முழுமையான கட்டுப்பாடு எந்தப் பயனும் தராது.

அதேவேளையில், வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகளுக்கு உச்ச நீதிமன்றம் எதிரானது அல்ல. இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்கள் எளிதில் அணுகக்கூடிய உள்ளடக்கங்களை நெறிப்படுத்தவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் தேவை. குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குப் பெற்றோரின் ஒப்புதல், வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்.

“குழந்தைகளுக்கென சிறப்புத் தகுதியுடன் குழந்தைகள் பயன்முறை கணக்குகள் உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், அவர்களின் இணைய பயன்பாட்டு உரிமையையும் பாதுகாப்பதே அரசின் கடமை” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *