சென்னை, அக்.17 ‘கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?’ என்று முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் திருப்பூண் டியைச் சேர்ந்த வழக்குரைஞரும் தவெக நிர்வாகியுமான பூபாலன் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு உளவுத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் பூபாலன் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வந்த பூபாலன், தவெகவின் கண்ணியம், நற்பெயருக்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்டதால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேதாரண்யத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற தவெக நிர்வாகி பூபாலனை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘முதலமைச்சர் Drugs-அய் விடு Sports-அய் எடு’ என்று மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், ‘முதலமைச்சர் சொல்வதை விடு, Drugs-அய் எடு’ என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பயணித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அப்படியென்றால், அவருடன் தொடர்பில் இருந்த வர்கள் யார்? யார் யாரிடமிருந்து போதைப்பொருளை பெற்றார்? இலங்கை தவிர்த்து வேறு எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்? ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுக்கு பங்கு கொடுப்பதால் தான் இவ்வளவு தைரியமாக போதைப்பொருள் கடத்துகிறாரா?
ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளை ஒழிப்பேன் என்று சொன்ன டம்மி முதலமைச்சர், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?
இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் தேசிய புலாய்வு முகமை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திிட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
செய்திச் சுருக்கம்
* சென்னையில் விடிய விடிய கனமழை – பாரிமுனையில் 35 செ.மீ பதிவு: சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பாரிமுனையில் மட்டும் 8 மணி நேரத்தில் 35 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ம்யம் தெரிவித்துள்ளது.
*சாலைகளில் தேங்கிய நீர் வடிந்தது – குடியிருப்புகளில் இன்னும் தண்ணீர்: பாரிமுனை, ராயபுரம், வண்ணை பகுதிகளில் முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீர் அதிகாலையில் வடிந்தது. ஆனால் நுங்கம்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
10 இடங்களில் மரம் விழுந்தது – 4 இடங்களில் தீ விபத்து: கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக சென்னையில் 10 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்கசிவு காரணமாக 4 இடங்களில் சிறிய அளவிலான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
* இசையமைப்பாளர் தேவாவுக்கு இறுதி மரியாதை: மறைந்த தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் மரியாதை செலுத்தினர். அவரது இறுதி நிகழ்வு இன்று அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது.
* நாகையில் போதைப்பொருள் வழக்கு – தவெக நிர்வாகி உட்பட 4 பேர் சிறையில்: நாகை அருகே மெத்தம்பைட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி உட்பட 4 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
