“ஒரு கிலோ அரிசி விலை 100 ரூபாய் ஆச்சு” – அமைச்சரின் பேட்டியின் போது திடீரென வந்த பெண்ணின் குரல்!

- Advertisement -

சென்னை, அக். 17- தமிழ்நாட்டில் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன், “சென்னையைப் பொறுத்த வரைக்கும், அர்பன் டிபார்ட்மென்ட்டில் பல இடங்களில் மக்கள் ஆர்வமாக வார இறுதியில் பார்ட்டிக்குப் போவார்கள். கடைக்குப் போய் சாப்பிடலாம் என நினைப்பார்கள். நான்கூட பல நேரங்களில் வீட்டில் சாப்பிடுவோம். சில நேரம் கடைகளில் சாப்பிடுவோம்.

இந்த சனி, ஞாயிற்றுக்கிழமை வந்தால், இந்த ஆட்சி அமையறதுக்கு முன்னாள் நான் ஓய்வாக இருக்கும்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பமாகப் போய் கடையில் சாப்பிடுவோம். இது ஒரு மகிழ்ச்சி. மக்களோடு மக்களாக, நம் குடும்பத்துக்காகச் செலவு செய்கிற சிறப்பு தருணம். அப்போது சாப்பிடும்போது ஒரு மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களுடன் போவோம், ஆபீஸ் ஸ்டாஃப் கூடப் போவோம்.

இந்த மாதிரியெல்லாம் போய் சாப்பிடும்போது அது ஒரு ஹேப்பினஸ். அது அந்த மொமென்ட்டுக்காகத்தான் நம்ம இந்த மாதிரி ஒரு விஷயத்தைச் சொல்ல வருகிறோம்” எனப் பேசினார். இதற்கிடையே அரிசி விலை உயர்வு தொடர்பாக உணவுத்துறை அமைச்சரின் பேட்டியைப் பார்த்து கொதித்தெழுந்த பெண் ஒருவர், “ஒரு கிலோ அரிசி விலை 100 ரூபாய் ஆச்சு” என அமைச்சரை பேசவிடாமல் ஆவேசமாகக் கூற வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *