சிஜேபி போரட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான்கான் இந்தியாவை விட்டு வெளியேற ஒன்றிய குடியேற்றத் துறை உத்தரவு

- Advertisement -

மும்பை, அக். 16– மகாராட்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக நடிகர் இம்ரான் கான் இந்தியாவை விட்டு வெளியேற ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் அக்டோபர் 10-ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில், நடிகர் இம்ரான் கான் கலந்து கொண்டார். இவர் அமெரிக்க குடியுரிமை மற்றும் இந்திய வம்சாவளி வெளிநாட்டு குடியுரிமை (ஓசிஅய்) பெற்றவர். ஓசிஅய் கார்டு என்பது வெளிநாட்டு சான்றளிக்கப்பட்ட குடியுரிமை வைத்திருக்கும் தகுதியுள்ள இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்படும் அட்டையாகும்.

இந்திய வெளிநாட்டுப் பிரஜை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஓசிஅய் தகுதி என்பது இந்தியக் குடியுரிமையை வழங்காது. ஓசிஐஅய் கார்டுதாரர்கள் இந்தியாவில் தங்கியிருந்தாலும் அவர்கள் தொடர்ந்து வெளிநாட்டுப் பிரஜைகளாகவே கருதப்படுவார்கள்.

இருப்பினும், விதிகளுக்கு உட்பட்டு இந்தியாவுக்கு வந்து செல்ல வாழ்நாள் முழுவதுக்குமான ‘மல்டிபிள் என்ட்ரி விசா’ உள்ளிட்ட சில சிறப்புச் சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஓசிஅய் கார்டுதாரர்கள் இந்தியத் தேர்தல்களில் வாக்களிக்கவோ, நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவோ முடியாது. மேலும் இந்தியாவில் நிபந்தனையற்ற வகையில் தங்க முடியாது.

இந்த நிலையில்தான் நடிகர் இம்ரான் கான் வரும் அக்டோபர் 28-க் குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடியேற்றத்துறை உத்தரவிட்டுள்ளது. இம்ரான் கான் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் அவர் சட்டத்தை மீறிவிட்டதாக பாஜக தலைவர் கிரிட் சோமையா அளித்த புகாரைத் தொடர்ந்து ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுகுறித்து சோமையா கூறும்போது, “இந்தியாவில் இதுபோன்று ஆயிரக்கணக்கான இம்ரான் கான்கள் உள்ளனர். அவர்கள் இங்கு வாழ்ந்து கொண்டே நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்த விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *