அரூர், அக். 14- அரூர் கழக மாவட்டம், வீரப்ப நாயக்கன் பட்டியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் ச.சுபாஷ் சந்திர போஸ் தந்தை பெரியார் கொள்கையை ஏற்று தன்னை மாணவர் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
அவருக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ. தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சா. இராசேந்திரன், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பெ.கல்பனா, மாவட்ட மகளிரணிச் செயலாளர் பெ. உமா, மாவட்ட கலைத்துறைத் தலைவர் கவிஞர் கீரை. பிரபாகரன், இளைஞரணி செயலாளர் சஞ்சீவன் ஆகியோர் பயனாடை அணிவித்து தந்தை பெரியாரின் நூல்களை வழங்கி வாழ்த்துக் கூறினர்.
திராவிட மாணவர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவர் சுபாஷ் சந்திர போஸ்
Leave a Comment
