திருப்பூரைக் குலுக்கிய சமூக நீதி சமத்துவத்திற்கான பெரியார் நடை தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தொடங்கி வைத்தார்

2 Min Read
- Advertisement -

திராவிடர் கழகம்

 

திருப்பூர், அக். 14- தந்தை பெரியார்148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சமூக நீதி சமத்துவத்திற்கான பெரியார் நடை 11.10.2026 காலை 6.30 மணி அளவில்  திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் அறிஞர்அண்ணா சிலை அருகில் புறப்பட்டு குமரன் சாலை வளர்மதி பாலம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், திருப்பூர் நகராட்சிப் பூங்கா சாலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கடந்து மீண்டும் திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் அறிஞர் அண்ணா சிலையை வந்தடைந்தது.

300-க்கும் மேற்பட்ட தோழர்கள் தந்தை பெரியார் படம் பொறித்த கருப்பு டி சர்ட் அணிந்து பங்கேற்று எழுச்சியை ஏற்படுத்தினர்.

திராவிடர் கழக மாநில கலைத்துறைச் செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன் இயற்றிய பெரியார் நடைக்கான சிறப்புப் பாடல் நடைப்பயணம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது எழுச்சியை ஏற்படுத்தியது. பெரியார் நடைப் பயணத்திற்கு திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் யாழ் ஆறுச்சாமி தலைமையேற்று வழி நடத்தினார்.

பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வேலு.இளங்கோவன், பகுத்தறி வாளர் கழக மாவட்ட செயலாளர் மு.நாச்சியப்பன், பகுத்தறிவாளர்கழக மாவட்ட அமைப்பாளர் மு.துரைசாமி, மாவட்ட காப்பாளர் நளினம் நாகராஜ் அவிநாசி நகரத் தலைவர் ராமசாமி, மாநகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நாக.சதாசிவம், காங்கேயம் நகரத் தலைவர் பா.மணிவேல், திருப்பூர் மாநகரச் செயலாளர் கா.வீரமுத்து, மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் கிருஷ்ணவேணி,திருப்பூர் மாநகரத் தலைவர் கருணாகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் துரைமுருகன், திருப்பூர் மாநகர திமுக செயலாளர் டி. கே.டி. நாகராஜன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வ ராஜ் பெரியார் நடையை தொடங்கி வைத்து இது போன்ற நடைப்பயணம் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என தெரிவித்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

நிறைவாக ஆதித்தமிழர் பேரவை மாநில ஒருங்கி ணைப்பாளர் விடுதலைச் செல்வன் மாவட்ட செயலாளர் மணி புரட்சிகர இளைஞரணி பொறுப்பாளர் நல்லதம்பி பெரியார் தளம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் மற்றும் அங்க குமார், முத்துக்குமார், ரமேஷ் பாபு, நளின மனிதர்கள் அமைப்பு பாரதி சுப்பையன் ஆகியோர் பெரியார் நடையில் பங்கேற்று வாழ்த்துரை ஆற்றினர். திருப்பூர் மாவட்டச் செயலா ளர் செல்வராஜ் நன்றியுரை ஆற்றினார்.

திமுக பகுதி செயலாளர் நந்தகோபால் திமுக பொறுப்பாளர் டுவின் கருணாநிதி தாராபுரம் மாவட்ட ப.க செயலா ளர் முருகேசன், தாராபுரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் கோடீஸ்வரன் திரா விட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் தொழிலதிபர் பாரதி சுப்பராயன், தஞ்சாவூர் மாநகர துணைச் செயலாளர் இரா. இளவரசன் திருப்பூர் ராஜப்பன் உள்ளிட்ட ஏறத்தாழ 300 நபர்கள் பங்கேற்று சிறப் பித்தனர்.

முன்னதாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. இறுதியாக அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கி சிறப்பிக்கப்பட்டது.  பெரியார் நடை திருப்பூரில் ஒரு புது எழுச்சியை புதுத் திருப்பத்தை உருவாக்கியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *