தலைநகர் டில்லியில் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களின் போது, டில்லி காவல்துறையினருடன் சேர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் வன்முறையில் ஈடுபடுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக புலனாய்வு விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
தனியார் வணிக நிறுவனம் ஒன்று, காவல்துறை அணியும் சீருடைகளைப் போன்ற ஆடைகளை 2,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விநியோகம் செய்துள்ளதாக அந்த புலனாய்வுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் பெயரில் பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்படும் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கலாம் முடுக்கி விடப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் இதனால் ஏற் பட்டுள்ளது.
காவல்துறைக்கு என்று தனித்துவ தலைக்கவசம், பெயர்ப் பட்டை மற்றும் பதவிகளுக்கான அடையாளச் சின் னங்கள் இருக்க வேண்டும்.
ஆனால், கடந்த சில நாள்களாக முறையான அடையாளங்கள் ஏதுமின்றி, வெறும் காக்கி ஆடை மட்டும் அணிந்த நூற்றுக்கணக்கான நபர்கள் காவல் துறையினருடன் இணைந்து கூட்டத்தில் ஊடுருவியுள்ளனர். அவர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்குப் பயன்படுத்தும் ஹெல்மெட், இருசக்கர வாகனத் தலைக்கவசம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்களை அணிந்து கொண்டு, அமைதிவழியில் போராடுபவர்களைத் தாக்கிப் படுகாயப்படுத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் இவர்களைப் பிடிக்க முயலும் போது, டில்லி காவல்துறையினர் அவர்களுக்குப் பாதுகாப்பளித்து வேறு பகுதிக்கு அழைத்துச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுகளையும், சட்ட விதிமுறைகளையும் டில்லி காவல் துறை முற்றிலுமாகப் புறக்கணிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைக் கையாள வேண்டிய சட்ட நடைமுறைகள் எதுவுமே பின்பற்றப்படவில்லை. போராட்டக் காரர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குவது, சிறுமிகளின் உடைகளைக் கிழித்து அவர்களை மிருகத்தனமாகக் கையாண்டுப் பேருந்துகளில் வீசி எறிவது போன்ற கொடூரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, உண்மைகளை வெளிக் கொண்டு வரும் இணையதளச் செய்தி யாளர்களை இலக்கு வைத்து, அவர்கள் மீது கொடூரமானத் தாக்குதல்களைக் காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மோசமான அதிகார மீறலாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது. ஒரு சர்வாதிகார நாட்டில் கூட நடைபெறாத இதுபோன்ற கொடூரமானத் தாக்குதல்கள் தலைநகரில் அரங்கேறுவது கடும் கண்டனத்திற்கும், கவலைக்கும் உரியது. இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால், பாஜக ஆளும் பிற மாநிலங்களிலும் இதேபோன்று காவல்துறையைப் பயன்படுத்திப் போராட்டங்களை ஒடுக்கும் அபாயம் ஏற்படும் என்றும், நாடு உண்மையான சர்வாதிகாரப் பிடிக்குள் சென்றுவிடும் என்றும் சமூக ஆர்வலர்களும், ஜன நாயக சக்திகளும் எச்சரிக்கின்றனர்.
பிஜேபியின் இன்னொரு “மிசாவோ” என்று கருத வேண்டியுள்ளது.
உச்சநீதிமன்றம்
கூறியிருப்பது என்ன?
இந்தியாவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது குடிமக்களின் அடிப்படை உரிமை என்பதுடன், அது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகளும் கருத்துகளும் பின்வருமாறு சுருக் கப்பட்டுள்ளன: அடிப்படைஉரிமை: இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(a)இன் படி பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் பிரிவு 19(1)(b)இன் படி ஆயுதமின்றி அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமை ஆகியவை குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளாக வழங்கப் பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து கேள்வியெழுப்பவும், கருத்து வேறுபாடுகளைத் தெரிவிக்கவும் போராடும் உரிமை அவசியமானது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் உறுதிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தையோ, நீதிமன்றத் தீர்ப்புகளையோ மதிக்கும் பண்பு இப்போதைய ஒன்றிய பிஜேபி அரசுக்குக் கிஞ்சிற்றும் கிடையாதே!
ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளுக்குக் காவல்துறை உடைகளையும், தலைக் கவசங்களையும் கொடுத்து போராட்டம் நடத்துவோர் மத்தியிலே ஊடுருவச் செய்து, கலகம் விளைவிப்பது எல்லாம் பச்சைப் பாசிச நடவடிக்கை அல்லவா!
ஹிட்லரின் கொடியையே தங்கள் கொடியாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அரசில் இப்படி எல்லாம் நடப்பதில் ஆச்சரியம் என்ன?
