சென்னையில் போராடிய மருத்துவப் பணியாளர்கள் கைது

சென்னை, அக்.12 சென்னையில் பணிநிரந்தரம் கோரி போராட்டம் நடத்திய பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக இன்று (12.10.2026) கைது செய்யதுள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ மனைகளில் பணிபுரியும் தற்காலிக பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று பட்டனிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்.

ஆனால், அவர்களின் போராட்டத் துக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், பிற மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்பட்ட நிர்வாகிகளை ஆங்காங்கே வீட்டுக்காவலில் அடைத்து வைத்துள் ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து இன்று காலை போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, காவல்துறை அனுமதி அளிக்காததை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்களை காவல்துறையின் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *