சென்னை, அக். 12- தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக விவசாயம் மற்றும் இதர முன்னுரிமைத் துறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஒட்டுமொத்தமாக ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை விரைந்து எய்தும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் எளிதில் கடன் உதவி பெறும் வகையில் வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முகாம் விவரங்கள்
செவ்வாய்க்கிழமை தோறும் சிங்கப் பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும். பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சொந்த வீடு என்ற லட்சியத்தை அடைவதற்கும் இது பெரிதும் உதவியாக இருக்கும்
இதர முன்னுரிமைத் துறை கடன்களுக் கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இப்புதிய கடன் திட்டங்கள், தேவையான ஆவணங்கள் மற்றும் முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்:
தொடர்பு எண்: 9884000845
