தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கக்கூறி குடியரசுத் தலைவரிடம் ‘இண்டியா’ கூட்டணி மனு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக். 10-  தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தி வரும் ‘இண்டியா’ கூட்டணி கட்சியினர், இது தொடர்பாக 8.10.2026 இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:

“தேசத்தில் வாக்கு திருட்டு நடைபெறவில்லை என்று குடியரசுத் தலைவர் மறுப்பார் என நான் எதிர்பார்த்தேன். இந்தியாவில் நியாயமான முறையில், சுதந்திரமாக தேர்தல் நடைபெறுகிறது என்று சொல்வார் என்பது எனது எதிர்பார்ப்பு. ஆனால், நாங்கள் சொன்னதை அவர் ஏற்றுக் கொண்டார். அது எனக்கு அதிர்ச்சியும், திகைப்பும் தந்தது.

எங்கள் தரப்பில் நாங்கள் அவரிடம் மனு அளித்தோம். தேசத்தில் ஜனநாயகத்தை அழிக்கும் செயலை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்துள்ளனர் என்று அதில் தெரிவித்தோம். அதை குடியரசுத் தலைவர் மறுக்கவோ, கேள்வி கேட் கவோ, விவாதிக்கவோ இல்லை. அது தொடர்பான ஆதாரங் களை சமர்ப்பிக்குமாறு கேட்டார்.

தேர்தல் திருட்டு என்பது தேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் அறிந்தது. ஒவ்வொரு மாநிலமாக இது நடந்துள்ளது. 2024 பொதுத்தேர்தலில் கூட இந்த தேர்தல் திருட்டு வேலை நடந்துள்ளது. இருப்பினும் குடியரசுத் தலைவர் ஆதாரம் கேட்கிறார். ஆதாரத்தை அவர் ஏற்க தயார் என்றால் அதை நாங்கள் சமர்ப்பிக்க தயார்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட்டாக இணைந்து சந்தித்தனர். இதில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா, சமாஜ்வாதி கட்சியின் ராஜிவ் ராய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் எதிர்க்கட்சிகள் அளித்த மனுவில் முக்கிய அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

lதலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்.

lஎஸ்அய்ஆர் நடவடிக் கையை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து சட்ட விரோதமாக நீக்கப்பட்ட 13.30 கோடி வாக்காளர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப் பட வேண்டும்.

l கடந்த இரண்டு ஆண்டு களில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்.

ஆகிய முக்கிய கோரிக்கை களை முன் வைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *