நாகர்கோவில், அக். 9– குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக பெரியார் பிறந்த நாளில் விழிக்கொடை வழங்குவதாக அறிவித்த தோழர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் ஒழுகினசேரியில் நடந்தது.
திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தோழர்களுக்கு சான்றிதழ் வழங் கினார்.
மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், கழக காப்பாளர் ம.தயாளன் மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் உ.சிவதானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக இலக்கிய அணிச் செயலா ளர் பா.பொன்னுராசன், துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், துணைச் செயலர் சி.அய்சக் நியூட்டன், தொழிலாளர் அணிச் செயலாளர் க. யுவான்ஸ், நாகர் கோவில் மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி, பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் மு.பெரியார் தாஸ், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, கழகத் தோழர்கள் ம.செல்வராசு, கூடங்குளம் பாலகிருஷ்ணன், எ.ச.காந்தி, தங்கராஜ், பி.கென்னடி, தோவாளை ஒன்றியச் செயலாளர் ந.தமிழரசன், மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் மஞ்சு குமாரதாஸ், பெரியார் பெருந்தொண்டர் பாறைக்காவிளை மு.பால் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
