தமிழ்நாட்டுக்கு 15 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக்.9 தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் 15 நாள்களுக்கு காவிரி நீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் இன்று (அக். 8) காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கருநாடக அரசு திறந்து விடுவ தில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டது. தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கைக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மறுப்பு தெரி வித்தது. இருப்பினும், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது. இந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந் துரையை ஏற்று, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கண்டிப்பாக திறக்க முடியாது என கருநாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும்நிலையில், 15 நாள்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தர விட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *