தாய்மாமன் சீர், அண்ணன் சீர்வரிசை என 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி பெண்களை இழுத்துச் செல்லும் த.வெ.க. அரசு! தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி கண்டனம்

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 09– தாய் மாமன் சீா், அண்ணன் சீா் எல்லாம் வேண்டாம், மகளிர் சொந்த காலில் நிற்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்டக் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டா் அணி சார்பில் சென் னையில் நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

சீரே எங்களுக்கு வேண்டாம். பெண்கள் யார் கையையும் எதிர்பார்த்து நிற்கக் கூடாது என்பது திமுக கொடுக்கக் கூடிய கோட்பாடு. மகளிருக்கு சொத்துகளில் சம உரிமை இருக்கு. கல்வி, வருமானம் இருக்கிறது. வருவாய் ஈட்டி தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், படிக்க வேண்டும் என சொல்லித் தந்தது திராவிட இயக்கம், திமுக.

ஆனால், இந்த ஆட்சியில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், அண்ணன் சீா் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்தச் சீா் எல்லாம் வேண்டாம். ஒரு கிராம் மோதிரத்தில் என்ன வரப்போகிறது? அந்த ஒரு கிராம் தங்கம் மோதிரத்தால் அந்தக் குழந்தைக்கு எதுவும் வந்துவிடப் போவதில்லை.

எல்லா மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான மருந்துகள் இல்லை, போதுமான மருத்துவா்கள் இல்லை. அதை எல்லாம் பற்றி அரசுக்கு கவலையில்லை. ஆனால் பல நூறு கோடிக்கணக்கான ரூபாயை இந்த தங்கம் மோதிரம் வாங்க செலவு செய்துவிட்டு, மருத்துவா்களை எல்லாம் நகைக் கடைகளில் நிற்க வைத்துவிட்டு மோசமான ஆட்சியைத்தான் இப்போது தவெக நடத்தி வருகிறது.

பெண்கள், மற்றவா்களுக்கு சீா் கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பது திமுக. இன்னொருவரிடம் போய் சீா் வாங்கிக்கொண்டு நிற்க வேண்டும் என சொல்கிறது தவெக. தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய மகளிரை மறுபடியும் பழைய நிலைக்கே இன்னும் 50 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு போகக்கூடிய ஆட்சிதான் இப்போது நடக்கிறது என்றார் அவா்.

இந்தக் கூட்டத்தில் திமுக சென்னை கிழக்கு மாவட்டச் செய லாளரும் முன்னாள் அமைச்சரு மான பி.கே.சேகா்பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *