அக்.10-இல் நடக்கும் சிஜேபி போராட்டத்தில் பங்கேற்கக் கூடும்! மம்தா திட்டம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கொல்கத்தா, அக். 9 டில்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக வரும் அக்.10 ஆம் தேதி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நடத்தும் போராட்டத்தில் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா  பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் சட்டவிரோதமான முறையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் வரும் அக்.10 ஆம் தேதி கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் தலைமையில் நடை பெறும் போராட்டத்தில் தான் பங்கேற்கக் கூடும் என மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, செய்தியாளர்களுடன் நேற்று (அக்.8) மம்தா பேசுகையில், “ஜந்தர் மந்தரில் வரும் அக்.10 ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கக் கூடும். இப்போது எதையுமே உறுதியாகச் சொல்ல முடியாது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, சிஜேபி போராட்டங்களுக்கு மம்தா  தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், இன்று நடைபெறும் இந்தியா கூட் டணியின் போராட்டத்தில் பங்கேற்க அவர் டில்லி சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *