ஊர்க்காவல் படையில் சேர சேலையில் வெறுங்காலுடன் ஓடிய பெண் இலக்கை 6 நிமிடத்தில் கடந்து சாதனை

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ராஞ்சி, அக்.8 ஜார்க்கண்டில் நடைபெற்ற ஊர்க்காவல் படை தகுதித் தேர்வில் பங்கேற்ற பெண் ஒருவர், சேலை அணிந்து வெறுங்காலுடன் ஓடும் காட்சிப் பதிவு இணையத்தில் பரவி வருகின்றது.

ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில் 284 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அக்டோபர் 24 முதல் நவம்பர் 5 வரை நடைபெறும் இந்தச் செயல்முறையில், 50 சதவிகித இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களுக்குக் கூடுதலாக 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உடல் தகுதித் தேர்வில் பங்கேற்ற சோசோ கிராமத்தைச் சேர்ந்த கவிதா குமாரி என்ற பெண், சேலை அணிந்து வெறுங்காலில் 1,600 மீ தூரத்தைக் கடந்த காட்சிப் பதிவு இணையத்தில் பரவியுள்ளது.

உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 1,600 மீ தூரத்தை 10 நிமிடத்தில் கடக்க வேண்டும் என்ற நிலையில், வெறும் 6 நிமிடத்தில் இலக்கை அடைந்துள்ளார் கவிதா குமாரி. கணவரை இழந்த கவிதா குமாரி, செங்கல் சூளையில் வேலை செய்து தனது இரு குழந்தைகள் மற்றும் வயதான மாமனார், மாமியாரை பராமரித்து வருகிறார்.

ஓடுவதற்கான காலணிகளோ, விளையாட்டு உடைகளோ வாங்கும் வசதி இல்லாத கவிதா குமாரி, ஊர்க்காவல் படையில் சேரும் நோக்கில், நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, வெறுங்காலில் ஓடி பயிற்சி பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். தனது குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் ஊர்க்காவல் படையில் சேர விரும்புவதாகக் கவிதா தெரிவித்துள்ளார்.

கவிதா குமாரி வெறுங்காலில் ஓடிய காட்சிப் பதிவு இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, உள்ளூர் தடகள பயிற்சிக் குழுவினர் அவரின் வீட்டுக்குச் சென்று பாராட்டியுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *