மூடநம்பிக்கையின் விளைவு! 2,300 ஆண்டுகால மும்பை பான்கங்கா குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடிந்த அவலம்!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மும்பை, அக்.8- மும்பையில் பான்கங்கா குளம் நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலமாகவும், குடிநீருக்கான முக்கிய ஆதாரமாகவும் விளங்குகிறது.

இந்த நிலையில் ஏற்கெனவே விநாயகர் சதூர்த்தி அன்று விநாயகர் சிலைகளைப் போட்டதால் இக்குளத்தின் கிழக்குப் பகுதி மோசமான அளவு மாசடைந்தது,

அதனை மும்பை மாநகராட்சி உடனடியாக சீர் செய்துவிட்டோம் என்று அறிக்கை விட்டது இருப்பினும் ஏரியைச் சுற்றி உள்ள மக்கள், “மும்பை மாநகராட்சி உண்மை யைப் பேச மறுக்கிறது.

இங்கே சிலைகளைக் கரைக்க அனுமதிக்க வேண்டாம் என்று நாங்கள் கூறியும் வெறும் களிமண் சிலைகள் மட்டும் தான் கரைக்கிறோம் என்று கூறி குளத்தை காப்பாற்றுவதில் முனைப்பு காட்டாமல் ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு சாதகமாக பேசி வந்தது” என்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் இறந்தவர்களுக்கு உணவு படைக்கிறேன் (பித்ருபக்ஷா) என்ற பெயரில் இந்த ஏரிக்கரையில் அதிக அளவு உணவுப் பொருட்களான பொறி, எள், உள்ளிட்ட தானியங்கள், நெல், பூ, மாலை, குங்குமம், சந்தனம், தேங்காய் மற்றும் சிறிய சிறிய ஆடைகள் இவை அடங்கிய மூங்கில் தட்டுகளை ஆயிரக்கணக்கில் பார்ப்பனர்களால் மந்திரம் ஓதப்பட்டப்பிறகு குளத்தில் விட்டனர்.

ஏற்கெனவே விநாயகர் சதூர்த்தி சிலை கரைப்பால் மாசடைந்து இருந்த ஏரி இவர்கள் போட்ட பூஜைப் பொருட்களால் மேலும் மாசடைந்தது, நீரில் போதிய ஆக்சிஜன் இன்றி பூஜைப்பொருட்கள் அனைத்தும் அழுகிப் போகவே நீரில் மீத்தேன் அளவு அதிகரித்து ஒட்டுமொத்த மீன்கள், நத்தைகள், இவற்றுக்கு உணவாகும். சிறிய பூச்சியினங்கள் கூட செத்து மிதந்தன.

மூடநம்பிக்கையால் ஒட்டுமொத்த உயிரியல் சூழலை அழித்து விட் டார்கள். அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதால் தாமதமாக விழித்துகொண்ட மாநகராட்சி இப்போது ஆட்களை வைத்து தூய்மைப்பணியைத் தொடங்கி உள்ளது.

மேலும் பொது மக்கள் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று கரைப் பகுதிகளில் தடுப்புகளை வைத்துள்ளது. இந்த ஏரி கிமு மூன்றாம் நூற்றாண்டில் மவுரிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் நிர்வாகிகளாக வெட்டப்பட்டது என்று பழைய கல்வெட்டு ஒன்று உள்ளது. 2300 ஆண்டுகளாக இருந்த உயிர்ச் சூழலை ஒரே நாளில் மூடநம்பிக்கை யின் பெயரால் ஒட்டு மொத்தமாக அழித்து விட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *