கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் நகைக் கடனுக்கான உச்சவரம்பு உயர்வு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 6- கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் நகைக் கடனுக்கான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: நகைக் கடன்களுக்கு ஒரு கிராமுக்கான கடன் தொகை அதிகபட்சமாக ரூ.10,000 வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என மாற்றியமைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தங்கள் சொந்தக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக் கடன் களுக்கான வட்டிக்கும், தொடக்கவேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே பெரும் வேறுபாடு நிலவியது.

இதை சரிசெய்யும் வகையில் நகைக்கடனுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம், அதன் கிளைகளில் பொதுமக்களுக்கு தரப்படும் நகைக்கடன் வட்டியைவிட குறைந்தது 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும். அதேநேரம், வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களின் லாப வரம்பு 2.25 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *