நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மாற்றம் திரிணாமூல் காங்கிரஸ் 2 முக்கிய தலைவர் பதவிகளை இழந்தது தி.மு.க. எம்.பி.க்கள் மீண்டும் நியமனம்!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

 

புதுடில்லி, அக்.05 மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மக்களவைத்  ஓம் பிர்லா ஆகியோர் பல்வேறு துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்களை மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்த மாற்றங்களில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அந்தக் கட்சி வகித்து வந்த இரண்டு முக்கியமான நிலைக்குழு தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. வர்த்தகத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்த திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டோலா சென்னுக்குப் பதிலாக, பாஜகவைச் சேர்ந்த சுதான்ஷு திரிவேதி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், ரசாயனம் மற்றும் உரங்கள் துறைக்கான நிலைக்குழு தலைவர் பதவியிலிருந்து திரிணாமூல் காங்கிரஸின் கீர்த்தி ஆசாத் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அதே கட்சியைச் சேர்ந்த அதிருப்தி பிரிவுத் தலைவரான ககோலி கோஷ் தஸ்திதார் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மறுபுறம், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில்துறைக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக திருச்சி சிவாவும், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறைக்கான குழுவின் தலைவராக கனிமொழியும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதர எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் (வெளியுறவு விவகாரங்கள்), சரண்ஜித் சிங் சன்னி (விவசாயம்) மற்றும் முகுல் வாஸ்னிக் (கல்வி, பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர் நலம்) ஆகியோர் தங்களது நிலைக்குழு தலைவர் பதவிகளில் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *