பெரம்பலூர், அக். 5- தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்துக் கட்சியினர், திமுக மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர், மாவட்ட பொறுப்பாளர், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்பு!
தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி சமத்துவ நடைப்பயணம் நடைபெற்றது.
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி. தங்கராசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளர் விசயேந்திரன், மாவட்டக் காப்பாளர் அக்ரி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைப்பயணத்தின் தொடக்கமாக, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு மாவட்டக் காப்பாளர் அக்ரி ஆறுமுகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து தொடங்கிய சமூகநீதி சமத்துவ நடைபயணம் சங்குப்பேட்டை, ரோவர் வளைவு, பாலக்கரை, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இந்த நடைப்பயணத்தில் திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் சின்னச் சாமி, இளைஞரணி காளி தாஸ், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் நடராசன், பகுத்தறிவாளர் கழக ஆத்தூர் மாவட்டத் தலைவர் முருகானந்தம், திமுக பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் பரமேஷ் குமார், மாவட்டப் பொறுப்பாளர் ஜெகதீசன், மருத்துவர் அணி மாவட்டத் தலைவர் ஜெய லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், மேலும் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்புலிகள் கட்சி உள்ளிட்ட அனைத்து தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் என ஏரா ளமானோர் கலந்து கொண்டு சமூகநீதி சமத்துவத்தின் அவசி யத்தை வலியுறுத்தினர்.
