வடக்குத்து, அக். 4- வடக்குத்து ஊராட்சி அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா சிறப்புக் கருத்தரங்கம் ஒன்றிய கழகத் தலைவர் கனகராசு தலைமையில், மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட துணைத்தலைவர் மணிவேல் முன்னிலையில் 30.9.2026 அன்று மாலை 6:00 மணி முதல் எட்டு முப்பது மணி வரை நடைபெற்றது. கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தொடக்க உரை ஆற்றினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் அயலக தமிழ் வளர்ச்சிதுறைத் தலைவர் முனைவர் உ.பிரபாகரன் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் குடந்தை செல்வராசு, நெய்வேலி பாவேந்தர் விரும்பி, வடலூர் முருகன், மாவட்ட மகளிர் அணி தலைவர் முனியம்மாள், வடலூர் கலைச்செல்வி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமநாதன், வடக்குத்து பாஸ்கர், அப்பியம்பேட்டை வேலு, திமுக கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.
வடகுத்து-அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்புக் கருத்தரங்கம்!
Leave a Comment
