வடலூரைக் குலுக்கிய பெரியார் நடை!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திராவிடர் கழகம்

வடலூர், அக். 4- தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடலூரில் திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி சமத்துவத்துக்கான பெரியார் நடை(walk for periyar) நிகழ்ச்சி கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில்  இன்று (4.10.2026) காலை 6.30 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.

பேருந்து நிலையத்தில் தொடங்கிய பெரியார் நடை நெய்வேலி மெயின் ரோடு, ஞானசபை வளைவு, சந்தை அய்யனேரி வழியாக 4 கிலோ மீட்டர் சென்று பேருந்து நிலையத் தில் நிறைவு பெற்றது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் நடை நாடு முழுவதும் பகுத்தறிவை தூண்டியது, மூடநம்பிக்கைகளை முறியடித்தது, ஜாதி கொடுமைகளை ஒழித்தது, பெண் விடுதலையை தூண்டியது, கல்வி வேலை வாய்ப்பு பெருக்கி யது, சமூக நீதியை காத்தது, மனித சமத்துவத்தை பேணியது, சுயமரியாதை உணர்ச்சியை தூண்டியது, மொத்தத்தில் எல்லாருக்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி இந்த வையத்தை இட்டுச் சென்றது. அவரின் தொடர்ச்சியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்றும் பாடுபட்டு வருகிறார்.

பெரியார் இயற்றிய சமூக நீதி சுடரை சமத்துவச் சுடரை அணையாமல் காப்பது நம் கடமை என்பதை உணர்த்தும் ஒலி முழக்கங்களை தோழர்கள் எழுப்பி வந்தனர். நிகழ்வில் மாவட்ட கழக காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, கடலூர் மாநகர தலைவர் தென் சிவக்குமார், செயலாளர் சின்னதுரை, கவிஞர் விடுதலை, அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வடலூர் வசந்த், நடையாளர் கழகத்தைச் சார்ந்த வள்ளி மணாளன், சக்கரவர்த்தி, பாஸ்கர், வரதராஜன், ராஜேந்திரன், கஞ்ச மலை ஈஸ்வரன், பொறியாளர் புகழேந்தி, கருங்குழி செயல் வீரச்செல்வம், வடலூர் நகரத் தலைவர் புலவர் ராவணன், செயலாளர் கோடையிடி குணசேகரன், அமைப்பாளர் முருகன் ராயர் செல்வம், ஒன்றிய அமைப்பாளர் சேகர், மறுவாய் கழகத் தலைவர் திருநாவுக்கரசு, மாவட்டத் துணைத் தலைவர் மணிவேல், ஒன்றிய தலைவர் கனகராசு, மாவட்ட ப.க. அமைப்பாளர் தர்மலிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், தங்க பாஸ்கர் மேனாள் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் வேலு, யூடியூபர் திராவிடன் மறுவாய் கலைச்செல்வி மற்றும் மகளிரணி தோழியர்கள் இளைஞரணி தொடர்கள் பெரியார் பிஞ்சுகள் கலந்து கொண்டு சிறப்பித் தனர். பெரியார் நடை நிகழ்ச்சி வட லூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *