ஜெனிவா, அக். 3 அய்க்கிய நாடுகள் அவையின் 63வது மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க டில்லி உச்ச நீதிமன்றத்தின் 2 இரண்டு தமிழ் வழக் குரைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பன்னாட்டு நீதிமன்றம் (ICJ – International Court of Justice) மற்றும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் (ICC – International Criminal Court) அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு (Global Human Rights Defense) என்ற என்.ஜி.ஓ (NGO) அமைப்பு செயல்பட்டு வருகிறது. 2015 ஆண்டு முதல் பன்னாட்டு நீதிமன்ற விசாரணைகள் குறித்த அய்.நா சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்ட தொடர்களில் பங்கேற்று பணியாற்றி வருகிறது.
இந்த ஆண்டு நடை பெறும் 63ஆவது மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க தங்களது நெதர்லாந்து அமைப் பின சார்பில் பங்கேற்க இரண்டு தமிழ் வழக்குரைஞர்களை தேர்வு செய்து உள்ளது. மேற்படி கூட்ட தொடர் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அக் டோபர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்து தமிழ் வழக்குரைஞர்கள் ராம் சங்கர் ராஜா மற்றும் முத்து கணேச பாண்டியன் ஆகியோர் அக்டோபர் 6ஆம் தேதி 9ஆம் தேதி வரை பங்கேற்கவுள்ளனர்.
இந்த இரண்டு தமிழ் வழக்குரைஞர்கள் இலங்கையில் நடைபெற்ற இன படுகொலை, போர் குற்றங்கள், பாலியல் கொடுமைகள், பல்வேறு சித்திர வதைகள் மற்றும் தற்போது செம்மணி மற்றும் தமிழர் பகுதிகளில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள், மனித புதைகுழிகள் இருந்து வருவதும் குறித்தும் பேச உள்ளனர். பன்னாட்டு விசாரணை, நீதிக்கான கோரிக்கை, போர் குற்றவாளிகளை பன்னாட்டு குற்றவியல் சட்டங்களின் படி தண்டித்தல் ஆகியன குறித்து ஆதாரத்துடன் சமர்ப்பிக்க உள்ளனர். ஏற்ெகனவே 1,60,000 பேர் இனப் படுகொலையால் கொல்லப்பட்டு உள்ள னர் என்றும் 18000க்கும் அதிகமா னோர் காணா மல் போன தாகவும் விசாரணை அறிக்கைகள் கூறுகின்றன.
மனித புதைகுழிகள் இனபடுகொலைகள் செய்த இலங்கை ராணுவ அதிகாரிகள் மற்றும் அதிகார தலை வர்களை இலங்கை உள்நாட்டு சட்டத் தின்படி தண்டிப்பது என்பது நடக்காத ஒன்று. எனவே பன்னாட்டு நீதி விசாரணை மட்டுமே வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள் ளனர். இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இலங்கைக்கு எதிராக வாக்கு அளிக்க வேண்டும், நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும், மனித உரிமை மீறல்கள் செய்த அனைவரும் சட்டத் தின் படி தண்டிக்கபட வேண்டும் என்று வலி யுறுத்தி பேச உள்ளனர். இலங்கை தமிழர்களின் நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் டில்லி தமிழ் வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயல்பாடு களை மூத்த தமிழ் வழக்கறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் பாராட்டி ஊக்குவிக்கிறது.
