கிருட்டினகிரி, அக்.3- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப் பட்டணத்தில் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி காவேரிப்பட்டணம் – பாலக்கோடு பிரிவு சாலை அருகேயுள்ள தந்தை பெரியார் சிலைக்கு கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில், திமுக ஒன்றியச் செயலாளர் தேங்காய்.சி. சுப்பிரமணி, மேனாள் பொதுக்குழு உறுப்பினர் திமுக எஸ்.ஆர்.இராஜன், மாவட்ட கழக துணைத் தலைவர் தி.கதிரவன்.மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.சங்கர், திமுக தலைமை கழக பேச்சாளர் கனல் சுப்பிரமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காவேரிப்பட்டணம் ஒன்றிய கழக தலைவர் பெ.செல்வம் அனைவரையும் வரவேற்றார்.
கழகப் பொதுக்குழு உறுப்பினர் இல.ஆறுமுகம், மேனாள் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, துணைச் செயலாளர் பூ.இராசேந்திரபாபு, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இர.அஜய்குமார், மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி.இராச, இராமபுரம் கிளை மு.இரஞ்சித், பெண்டரஅள்ளி கிளை வீ.செங்குட்டுவன், பையூர் கிளைச் செயலாளர் வி.சரவணன், மற்றும் திமுக ஒன்றிய நிர்வாகிகள் சூரியபிரகாஷ், கேபிள் சின்னசாமி, அபிகவி. கி.கோவிந்தராஜி, சங்கர், விசிக ஒன்றியச் செயலாளர் சங்கர் உள்பட திமுக மற்றும் நிர்வாகிகளும் தோழர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வெகுசிறப்பாக எழுச்சியுடன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை நன்றிப் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்வில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
