நாடு எங்கே போகிறது? பனாரஸ் பல்கலை கழகத்தில் ஜாதகம் ஜோதிடப் பிரிவு தொடக்கமாம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக். 03-  உத்தரப் பிரதேசம் வாராணசியின் பழம்பெரும் கல்விநிலையமாக இருப்பது பனராஸ் இந்து பல்கலைகழகம் (பிஎச்யு). இங்கு ஜோதிடக் கல்வித்துறை சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. சம்ஸ்கிருத வித்யா தர்ம விஞ்ஞானப் புலத்தின் கீழ் செயல்படும் இத் துறையில் மாணவர்களுக்கு ஜோதி டப் பட்டத்திற்கான கல்வி போதிக்கப் படுகிறது. இதன் அங்கமாக, தற்போது மேம்படுத்தப்பட்ட ஜோதிடப்பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவு இப்போது சிறப்புச் சேவைகளை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஜாதகம் பார்ப்பது முதல் சடங்குகள் வரை 8 வகையான சேவைகள் வெளிநபர்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கவுள்ளன. ஜோதிடத் துறையின் ‘பஞ்சாங்கப் பிரிவு’ அலுவலகத்தில், இதற்கென பிரத்யேகமான குளி ரூட்டப்பட்ட அலுவலகம் அமைக்கப் பட்டுள்ளது.

இப்பிரிவின் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் வினய் பாண்டே அமர்த்தப்பட்டுள்ளார். ஜாதகம், நல்ல நாட்கள், திருமணப் பொருத்தம், வாஸ்து அடிப்படையிலான நிலத் திட்டம், மண் மேம்பாடு, ரத்தினக் கற்கள் மற்றும் சடங்குகள் குறித்த தகவல்களைத் தேடும் மக்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் இங்கு வழங்கப்படுகின்றன.

சடங்குகள் தொடர்பான ஆலோ சனைக்கு ரூ.250, நல்ல நேரம் அறிய ரூ.100, பேராசிரியராக உள்ள ஜோதிடரை மாவட்டத்திற்கு வெளியே அழைத்துச் செல்ல ரூ.21,000, மாவட்டத்திற்குள் அழைத்துச் செல்ல ரூ.11,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனச் செலவுகளைத் தனியாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தில் 50% ‘தட்சணை’ (கவுரவ ஊதியம்) அடங்கும்.

இதுகுறித்து பிஎச்யுவின் ஜோ திடக் கல்வித்துறையின் தலைவர் பேராசிரியர் சத்ருகன் திரிபாதி கூறுகையில், ‘ஒவ்வொரு நபரும் தங்கள் பிரச்சினைக்கான தீர்வைக் காண வருவதால், இத்தகைய சிறப்பு ஆலோசனை மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

ஜன்ம குண்டலி (பிறப்பு ஜாதகம்), வர்ஷ குண்டலி (வருடாந்திர ஜாதகம்) மற்றும் பிரஷ்ன குண்டலி (கேள்விக்கான ஜாதகம்) ஆகிய வற்றின் மூலம் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கான கட்டணத்தில் 50% ஜோதிடருக்கு தட்சணையாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை துறை மற்றும் பிற செலவு களுக்காக ஒதுக்கப்படும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *