கடந்த 27.9.2026 அன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வில் சர் பிட்டி தியாகராயர் குறித்து கண்டிக்கத்தக்க வகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
“கேள்வி எண்: 59
கூற்று மற்றும் காரணம் வகை:
கூற்று (A): இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சர், பிட்டி தியாகராயரை ‘தேச விரோதி’ என அழைத்தது.
காரணம் [R]: அவர் பிராமணர் அல்லாதோர் கொள்கை விளக்க அறிவிப்பை வெளியிட்டார்.
(A) கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
(B) [A] கூற்றும். [R] காரணமும் சரி, மற்றும் காரணம் (R], கூற்று (A]-க்கான சரியான விளக்கம்
(C) கூற்று (A) தவறு. காரணம் (R] சரி
(D) (A] கூற்று (R) காரணமும் சரி, ஆனால் காரணம் (R], கூற்று [A]-க்கான சரியான விளக்கம் அல்ல.”
சர் பிட்டி தியாகராயரைக் காங்கிரஸ் எப்போது ‘தேச விரோதி’ என்று அழைத்தது? அதற்கான சான்று என்ன? ஒரு கட்சியைச் சேர்ந்தவரை, இன்னொரு கட்சிக் காரர் இழித்துரைப்பதையெல்லாம் டி.என்.பி.எஸ்.சி கேள்வியில் எப்போது கேட்க ஆரம்பித்தார்கள்?
பார்ப்பன ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய நீதிக்கட்சியை, வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடிக்கிறார்கள் என்று விமர்சித்த அக்காலக் காங்கிரஸ் பார்ப்பனர்களின் உள்நோக்கம் எவ்வளவு பொய்யானது என்பதைப் பல முறை திராவிடர் கழகம் அம்பலப்படுத்தியுள்ளது. “விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும்” என்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வரலாற்று விமர்சன நூல் மறுக்கமுடியாத ஆதாரங்களைக் கொண்டு, இந்தப் புரட்டுகளையெல்லாம் முறியடித்திருக்கிறதே!
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் பார்ப்பனப் பார்வை யுடனான விஷமத்தனமான கேள்விகள் அவ்வப்போது இடம் பெறுவதை உரியோர் தலையிட்டுத் தடுக்க வேண்டும்!
