புதுடில்லி, செப். 29- டில்லியில் காற்றுமாசு தொடர்பாக முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் நேற்று (28.9.2026) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஒன்றிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்தர், டில்லி யூனியன் பிரதேச மூத்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்்படி டில்லி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 50 சதவீத ஊழியர்கள் நவம்பர் 1 முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை வீடுகளில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
டில்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரையும், டில்லி அரசு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் செயல்படும். தனியார் வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த டில்லி முழுவதும் வாகனநிறுத்த கட்டணம் இருமடங்காக அதிகரிக்கப்படும். மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த நடைமுறை நவம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை அமலில் இருக்கும்.
கட்டட மாசு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை வரும் நவம்பர் 1 முதல் ஜனவரி 31 வரை மேற் கொள்ளக்கூடாது. வரும் டிசம்பர் 10 முதல் ஜனவரி 20 வரை புதிய கட்டடங்களை கட்டக்கூடாது, பழைய கட்டடங்களை இடிக்கக்கூடாது என்று்ம் அரசு அறிவித்துள்ளது.
