செங்கல்பட்டு, தாம்பரம், சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தோழர்கள் கவனத்திற்கு!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வழக்குரைஞர் இ.பரந்தாமனை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

நாள்: 1.10.2026 வியாழக்கிழமை மாலை 5.00 மணி

இடம்: மூசிவாக்கம் பேட்டை,
வையாவூர் ஊராட்சி, மதுராந்தகம் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம்.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில், மாலை 4.00 மணிக்கு பரனூர் சுங்கச்சாவடி (Toll Gate) அருகில் தாம்பரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் திரளாக வருகை தந்து வரவேற்று பொதுக்கூட்டத்திலும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– வி. பன்னீர்செல்வம்
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *