நன்னிலத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திராவிடர் கழகம்

நன்னிலம், செப்.26- மனிதனாகப் பிறந்து தத்துவமாய் வாழ்ந்து வழிகாட்டும் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாளை நன்னிலம் ஒன்றிய திராவிடர் கழகம் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது.

நன்னிலம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருவாரூர் மாவட்ட காப்பாளர் வடுகக்குடி கோவிந்தராஜ் மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் கரிகாலன், ஒன்றியத் தலைவர் தன்ராஜ், ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், நகரத் தலைவர் தன சஞ்சீவி, லதா, நகரச் செயலாளர் சரவணன், சன்னாநல்லூர் ஓவியர் சங்கர், எரவாஞ்சேரி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் காங்கிரஸ் இளைஞர் அணியைச் சேர்ந்த சரவணன், திமுகவைச் சேர்ந்த பாஸ்கரன், நன்னிலம் செல்வா, திமுக துணைச் செயலாளர் முருகேசன், சிஅய்டியூ தொழிற்சங்கத்தை சேர்ந்த தோழர் சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு சமத்துவ நாள் உறுதிமொழியேற்று அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நன்னிலம் சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் அச்சுதை உலகநாதன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த மண்டலச் செயலாளர் என்.டி.இடிமுரசு, மண்டல துணைச் செயலாளர்கள் சிமா.மகேந்திரன், கோவி.தமிழழகன், மாநில நிர்வாகிகள் காவாளி ராஜேந்திரன், பொன். ராஜாஜி, திருமா.ராஜேஷ் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து சமத்துவநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநில துணைச் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன், மாநில கொள்கைபரப்பு துணைச் செயலாளர் ஆரூர் சீனிவாசன், கீழ்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மணிவண்ணன் உட்பட ஏராளமான தொண்டர் கள் அதிர்வேட்டுகள் முழங்க மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக வெற்றி கழகம் சார்பில் நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கலையரசன், மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், குடவாசல் தெற்கு ஒன்றியச் செய லாளர், தெற்கு ஒன்றியப் பொருளாளர் பாண்டியன், தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் ராஜசேகரன், ஒன்றிய செயற்குழு கார்பசேவ் உட்பட தொண்டர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியார் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் நன்னிலம் தந்தை பெரியார் சிலை, பெரியார் படிப்பகம் ஆகியவை வண்ண விளக்குகளாலும், கொடி தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தந்தை பெரியார் பிறந்தநாள் போஸ்டர்கள் ஒன்றியம் முழவதும் ஒட்டப்பட்டிருந்தது. கழக தோழர்களுக்கு அன்று மதியம் புலால் உணவு அளிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *