பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்குவதா? ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து தொ.மு.ச. ஆர்ப்பாட்டம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 23- சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் பொன்விழா வளைவு அருகில் தொமுச பேரவை சார்பில் நேற்று (22.9.2026) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச பேரவைத் தலைவர் கி.நடராசன் தலைமை தாங்கினார். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தலைவர் கி.நடராசன் பேசியதாவது:

இந்திய மக்களின் வரிப் பணத்தாலும் உழைப்பாலும் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்வசம் ஒப்படைப்பதில் பிரதமர் மோடி அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, நாட்டின் முதுகெலும்பாக திகழும் மகாரத்னா மற்றும் நவரத்னா அந்தஸ்து பெற்ற முதன்மை பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. மேலும், இந்தியத் தொழிலாளர் மாநாட்டை கூட்டாமலேயே, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டத் தொகுப்புகளையும் விதிகளையும் அவசர அவசரமாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது. இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

அதேபோல மாநில அரசும், தூத்துக்குடி, எண்ணூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் அனல் மின்நிலைய விரிவாக்கப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த முடிவை மாநில அரசு உடனே கைவிட வேண்டும். பல ஆண்டுகளாக தொகுப்பூதியத்திலும் தற்காலிகப் பணியாளர்களாகவும் வேலை பார்த்து வரும் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *