உலகத் தலைவர் தந்தை பெரியார் 148 ஆம் பிறந்தநாள்
“லேனே லேது; லேனே லேது; தேவுடு லேனே லேது! லேனே லேது; லேனே லேது; மந்திராலு மகிமைலு லேனே லேது!”
சென்னை, செப்.22- செப்டம்பர் 17இல் காட்சி தரும் வழக்கமான பெரியார் திடலை விட இந்த ஆண்டு கூடுதல் கவனம் பெற்றிருந்தது. அது, “என்றைக்கும் விட இன்றைக்குத்தான் தந்தை பெரியாரின் தேவை அதிகமாக உணரப்படுகிறது” என்று திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டிப் பேசி வருவதை மெய்பிப்பது போலிருந்தது.
அதற்கேற்ப காந்தி இர்வின் மேம்பாலத்திலிருந்தே கழகக் கொடிகள் சாலையின் இருபுறமும் காற்றில் அசைந்தாடி மக்களை வரவேற்றுக்கொண்டிருந்தன. கழகத் தோழர்கள் அவரவர் பகுதிகளில் தந்தை பெரியாரின் 148 ஆம் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, சாரை சாரையாக குடும்பங்களுடன் பெரியார் திடலுக்குள் படையெடுத்தவண்ணம் இருந்தனர். சந்தித்துக்கொள்கிறவர்கள் அனைவரும் தங்களது பிறந்தநாளைவிட குதூகலத்துடன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, ஒவ்வொருவரையும் தனித்தனியாக, ”அய்யா பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று அகமும், முகமும் மலர கைக்குலுக்கி மகிழ்ந்து கொண்டிருந்தனர். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தனது கட்சித் தோழர்களுடன் தந்தை பெரியார் நினைவிடத்துக்கு வருகை தந்து, மனிதநேயர் பெரியாருக்கு தனது மரியாதையைச் செய்தார். அதைத் தொடர்ந்து, த.வெ.க.வின் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.எம்.குமார், தமது கட்சித்தோழர்களுடன் வருகை தந்து, தங்கள் மரியாதையைச் செலுத்தினார். மாற்றுத்திறனாளி தோழர் வழக்குரைஞர் ப.ராமராஜன், சக்கரநாற்காலியில் வந்திருந்து தன்மானத்தை மீட்டுக்கொடுத்த தந்தை பெரியாருக்கு தனது வணக்கத்தைச் செலுத்தினார். ஆண்டுதவறாமல் பெரியார் திடலுக்கு வருகை தந்து, சமத்துவப்பெரியாருக்கு நன்றி செலுத்தும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மேரி அக்சீலியா இந்தாண்டும் வந்திருந்து பெரியாருக்கு மரியாதையை செலுத்தி மகிழ்ந்தார்.
சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் (DASE) பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தங்கள் தோழர்களுடன் வந்திருந்து, சமூகவிஞ்ஞானிக்கு தங்களின் மரியாதையை நன்றியை காணிக்கையாக்கிச் சென்றனர். தொடர்ந்து வி.சி.க. வின் முக
