முதலமைச்சர் விஜய் ஒப்புதலின்றி பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டத்துக்கு உத்தரவா? கனிமொழி கேள்வி

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 22- “முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் பட்டினப்பாக்கத்தில் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க உத்தரவிட்டார்களா?’ என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதல்வர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்காக?

முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாம லேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப் பணித் துறைக்கு உத்தரவிட்டார்களா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *