8 மணி நேரம் ரயில் தாமதத்திற்கு ரூ. 35,000 பயணிக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ராஞ்சி, செப்.22 ரயில் 8 மணி நேரம் தாமதமானதால் மன உளைச்சலுக்கு ஆளான தாக பயணி ஒருவர் புகார் தெரிவித்த வழக்கில், ரூ. 35,000 இழப்பீடாக வழங்க ரயில்வே துறைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் கடந்த 2024 செப்டம்பர் 23 ஆம் தேதி டாட்டா நகரிலிருந்து சம்பல்பூருக் குச் செல்ல ‘இஸ்பாட் எக்ஸ்பிரஸ்’ (Ispat Express) ரயிலில் இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்தார்.

அந்த ரயில் காலை 10.18 மணிக்கு டாட்டா நகரிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 3.50 மணிக்கு சம்பல்பூரைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ரயில் தாமதமாகப் புறப்பட்டு, திட்டமிடப்பட்ட நேரத்தைவிட 8 மணி நேரம் 48 நிமிடங்கள் தாமதமாக சம்பல்பூரைச் சென்றடைந்தது. இந்தத் தாமதத்தால் ஏற்பட்ட உடல்ரீதியான, மனரீதியான, நிதிசார்ந்து கடினமான உளைச்சலுக்கு ஆளானதாக ரூ. 4.5 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி நுகர் வோர் ஆணையத்திடம் சஞ்சய் குமார் முறையிட்டார்.

இந்த வழக்கில் சஞ்சய் குமாருக்கு, துன்புறுத்தலுக்கான இழப்பீடாக ரூ. 30,000, வழக்குச் செலவுகளுக்காக ரூ. 5,000 என ரூ. 35,000 தொகையை ரயில்வே செலுத்த வேண்டும் என்று நுகர்வோர் ஆணையம் கடந்த 2.9.2026 அன்று உத்தரவிட்டது. இந்தத் தொகையை 45 நாள்களுக்குள் செலுத்த வில்லை என்றால், பணம் செலுத்தப்படும் நாள் வரை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் அத்தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது.

“பயணிகளின் நேரம் மதிப்புமிக்கது, ரயில் தாமதங்களுக்கான காரணங்களையும், அவை தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்பதையும் ரயில்வே நிர்வாகம் விளக்க வேண்டும். அது நிரூபிக்கப்படாத வரை, ஒவ்வொரு பயணியின் நேரமும் விலைமதிப்பற்றது என்பதை மறுக்க முடியாது” என்றும் ஆணையம் கூறியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *