பயிர்க் கடனை வாக்குறுதி அளித்தபடி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்! த.வெ.க. அரசுக்கு விவசாய சங்கங்கள் கோரிக்கை

இணையவழி கையெழுத்து இயக்கம்

விருதுநகர், செப். 21- பயிர்க் கடனை அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி அக்டோபர் 8ஆம் தேதி மதுரையில் 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் விவசாயிகள் சங்கம் ஆகியவை இணைந்து அறிவித்துள்ளன.

தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. இதற்கு தென் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராம்பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் சீனிவாசகன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், தென் மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் அர்ச்சுணன், தமிழ் விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் நாராயண சாமி ஆகியோர் இணைந்து அளித்த பேட்டியில், “தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதி அடிப் படையில் விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். தனிப்பட்ட விவசாயிகளிடம் பிரிமியம் தொகை வசூல் செய்வதால் தனிப்பட்ட விவசாயி சர்வே எண்ணில் ஏற்படும் மகசூல் பாதிப்புக்கு காப்பீடு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள காப்பீடு தொகை அனைத்தையும் உடனே வழங்க வேண்டும். வறட்சி பாதிப்பு என்று அறிவிக்கப் பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் உடனே வழங்க வேண்டும். வைகை அணை, மேட்டூர் அணை, பிளவக்கல் அணை, பேச்சிப் பாறை அணை உள்ளிட்ட அனைத்து அணைகளும் தூர் வாரப்பட வேண்டும். ஏரிகள் குளங்கள் நீர் நிலைகள் அனைத்தையும் தூர் வாரி பாதுகாக்க வேண்டும்.

நெல் கொள்முதல் மய்யங்களில் நடக்கும் முறைகேடுகளைக் களைய வேண்டும். மக்காச் சோளம், பருத்தி, மிளகாய் ஆகிய விளைபொருட்களையும் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். போதுமான அளவு சேமிப்புக் கிடங்குகளை போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 8ஆம் தேதி மதுரையில் 5 ஆயிரம் விவசாயிகளைத் திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளது.” எனத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *