மனிதப் பற்று – ‘சமுதாயப் பற்று ஒன்றுதான் எனக்குண்டு’

இணையவழி கையெழுத்து இயக்கம்

நான்  ஒரு பகுத்தறிவுவாதி. நான் பகுத்தறிவுவாதி என்பது மட்டுமல்லாமல், நாட்டு மக்களிடையே நிலவிவரும் மூடநம்பிக்கைகள் ஒழிய வேண்டுமென்கிற சீர்திருத்தவாதி, ஆனதால் எனக்கு மதம் – கடவுள் – புராணப் பற்றோடு நாட்டுப் பற்று, மொழிப் பற்று, இலக்கண, இலக்கியப் பற்று கிடையாது. மனிதப்பற்று – சமுதாயப்பற்று ஒன்றுதான் எனக்குண்டு. அந்தச் சமுதாய இழிவு ஒழியவும், மானமற்ற இழிநிலை போகவுமே நான் தொண்டாற்றி வருகிறேன். இதன் மூலம் நான் எதிர்பார்ப்பதெல்லாம் நம் சமுதாய மக்கள் மற்ற உலக மக்களைப் போல இழிவற்று மானத்தோடு, அறிவோடு, நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான்.

– தந்தை பெரியார். ‘ விடுதலை 07.08.1969

  • • •

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *