ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள்தான்,
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வற்புறுத்துகிறோம்!
நாங்கள் தொடங்குகின்ற போராட்டம்
தோல்வியில் முடியாது, வெற்றியில் தான் முடியும்!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வற்புறுத்துகிறோம்!
நாங்கள் தொடங்குகின்ற போராட்டம்
தோல்வியில் முடியாது, வெற்றியில் தான் முடியும்!
1951 இல் மாணவர்கள் போராட்டத்தை நடத்திய நான்,
2026 இலும் அந்தப் போராட்டத்தை நடத்துகிறேன்!.
2026 இலும் அந்தப் போராட்டத்தை நடத்துகிறேன்!.
சென்னை, செப்.16 ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள்தான், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வற்புறுத்துகிறோம்! இப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும்; வெற்றி பெறுகிற வரையில் நடக்கும்.நாங்கள் தொடங்கி வைத்தால், அது தோல்வியில் முடியாது. வெற்றியில் தான் முடியும். 1951 இல் மாணவர்கள் போராட்டத்தை நடத்திய நான், 2026 இலும் அந்தப் போராட்டத்தை நடத்துகிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள்தான், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வற்புறுத்துகிறோம்! நாங்கள் தொடங்குகின்ற போராட்டம் தோல்வியில் முடியாது, வெற்றியில் தான் முடியும்!
- 1951 இல் மாணவர்கள் போராட்டத்தை நடத்திய நான், 2026 இலும் அந்தப் போராட்டத்தை நடத்துகிறேன்!.
- ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!
- திராவிடர் கழகம் சார்பாக, என்னை அழைத்தார்கள்!
- திராவிடர் கழகத் தலைவர் சொல்வதுதான் சரி; பெரியாருடைய கருத்துதான் சரி என்று சொன்னார்கள்!
- 102 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 105 அய் கொண்டு வந்தார்கள்!
- சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் யார் பிற்படுத்தப்பட்டிருக்கிறார்களோ, அவர்களைத்தான் கருத்தில் கொள்ளவேண்டும்!
- ஜாதியை மாற்ற முடியாது; மாறாதது, ஜாதிதான்!
- ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள்தான், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வற்புறுத்துகிறோம்!
- அம்பாசங்கர் தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தார்கள்!
- பெரியார் கண்ணாடிக்குத் தான் முதலில் தெரியும்!
- 1951 இல் மாணவர்கள் போராட்டத்தை நடத்திய நான், 2026 இலும் அந்தப் போராட்டத்தை நடத்துகிறேன்!
- பார்ப்பனரல்லாதவர்கள் அய்.ஜியாக வருவதற்காகப் போராட்டம் நடத்தினோம்!
- வெற்றி பெறுகின்ற வரையில், எங்கள் போராட்டம் ஓயாது!
- பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்பட எல்லா பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் கேட்கிறோம்!
ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!
கடந்த 11.9.2026 அன்று முற்பகல் 11.30 மணிக்கு, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே திராவிடர் கழகம் சார்பில், ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
மற்றவை என்று சொல்லும்போது, ‘இதர பேக்வர்ட் கிளாஸ்’ – ‘இதர’ என்ற வார்த்தை வந்தது. அந்த நிலை இன்றைக்குப் போய்விட்டது, நம்மமுடைய போராட்டத்தினால்!
எப்படி என்றால், 1918 ஆம் ஆண்டிற்கு முன்னால், மிகப்பெரிய அளவிற்கு இந்த வார்த்தை இருக்கலாம் என்ற நிலைதான் இருந்தது. ஆனால், இதுபோன்ற சந்தேகங்கள் எல்லாம் வந்தால் என்ன செய்வது? என்கிற ஒரு குழப்பமும் நீடித்து வந்தது.
திராவிடர் கழகம் சார்பாக,
என்னை அழைத்தார்கள்!
என்னை அழைத்தார்கள்!
நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள், மற்றவர்கள் எல்லாம் சொன்ன உடனே, இதே மோடி அரசு, இதே ஆர்எஸ்எஸ் அரசு, ஒரு புதிய சட்டத்தை, திருத்தத்தை உருவாக்கி உள்ளே விட்டார்கள். நாம்தான் அதைச் சொன்னோம். இதற்காக இந்திய அளவில் இந்தப் பிரச்சினையில் மற்றைய முக்கியமானவர்கள், இந்தத் துறையில் யார் கெட்டிக்காரர்கள் என்றும் பார்த்து, நாடாளுமன்றத்தில் சாட்சியத்துக்கு அழைத்தார்கள். என்னை, திராவிடர் கழகம் சார்பாக அழைத்தார்கள். அங்கே சென்று, எடுத்துச் சொன்னோம். இந்தியாவி னுடைய எல்லா மாநில எம்பிக்கள் எல்லாம் அங்கே அமர்ந்திருந்தார்கள். அவர்கள் சில கேள்விகளைக் கேட்டார்கள். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொன்னோம்.
திராவிடர் கழகத் தலைவர் சொல்வதுதான் சரி; பெரியாருடைய கருத்துதான் சரி என்று சொன்னார்கள்!
‘‘நீங்கள் ஒரு வடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அதன்படி வந்தால், மறுபடியும் குழப்பம் ஏற்படும். சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்று தெளிவாக ஏற்கெனவே இருக்கிறது. அதனால் நாங்கள் சொல்கிறபடி, அதையே வைத்துக் கொண்டால், பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதற்குச் சட்டக் குழப்பம் நீதிமன்றங்களில் ஏற்படாது’’ என்று சொன்னோம். பிஜேபி அவ்வளவு சீக்கிரம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மற்றவர்கள் எல்லாம் திராவிடர் கழகத் தலைவர் சொல்வதுதான் சரி; பெரியாருடைய கருத்துதான் சரி என்று சொன்னார்கள். கனிமொழி அந்தக் கூட்டத்தில் ஒருவராக இருந்தார். டி.கே.ரங்கராஜனும் அந்தக் குழுவில் இருந்தார். தமிழ்நாட்டு குழுவில் அவர்கள் எல்லாம் இருந்தார்கள்.
102 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 105 அய் கொண்டு வந்தார்கள்!
ஆனால், அதை மீறி 102 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். அதிலும் குழப்பம் வந்தது. அவர்களுக்கு அந்தக் குழப்பமும் தெரிந்துவிட்டது. ஒரு மாதத்திற்குள்ளாக அதே கூட்டத்தொடரில் 102 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 105 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தைப் புதிதாகக் கொண்டு வந்தார்கள்.
என்ன அந்த புதியது என்றால், திராவிடர் கழகம் கொடுத்த திட்டம்தான். அதுவே இதற்குச் சரியானது என்று, அதைக் கொண்டு வந்தார்கள். அதுதான் 105 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாகும்.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் யார் பிற்படுத்தப்பட்டிருக்கிறார்களோ, அவர்களைத்தான் கருத்தில் கொள்ளவேண்டும்!
ஜாதிபற்றி, பிற்படுத்தப்பட்டவர்களைப் பற்றிச் சந்தேகம் வந்தால், விவாதம் வந்தால், பிரச்சினைகள் என்று வந்தால், அதற்கு தீர்வு எப்படி காண்பது என்றால், Socially and Educationally – சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் யார் பிற்படுத்தப்பட்டிருக்கிறார்களோ, அவர்களைத்தான் கருத்தில் கொள்ளவேண்டும். நன்றாகக் கவனிக்கவேண்டும். பொருளாதார ரீதி யாகக் கிடையாது; ஏனென்றால், இந்த இரண்டும் மாறாதது, மாற்றப்பட முடியாதது. படிக்காதவர்கள் என்றால், புள்ளிவிவரம் இருக்கிறது. சமூக ரீதியானது என்றால், சமூக ரீதியான இன்னும் மோசமான நிலை, காலங்காலமாக உரிமை மறுக்கப்பட்டிருந்த நிலை உறுதியாகத் தெரிய வரும்.
ஜாதியை மாற்ற முடியாது;
மாறாதது, ஜாதிதான்!
மாறாதது, ஜாதிதான்!
ஆகவேதான், அதற்குரிய அடையாளம் என்ன? அதற்கு உதாரணம், நம்முடைய மல்லிகார்ஜுன கார்கவே போதும். அவர் பேசிய மேடையில் ஏன் தீர்த்தத்தைத் தெளிக்கி றான்? ஏன் மேடையில் தீட்டுக் கழிக்கிறான்? அவரே வேதனைப்பட்டுச் சொல்லியது எல்லோருக்கும் தெரியுமே! சமூக ரீதியாக இன்னமும் தாழ்த்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர்தான். அவர் நீதிபதியாக இருக்கலாம்; குடியரசுத் தலைவராக இருக்கலாம்; பிரதமராகக் கூட இருக்கலாம். ஆனால், அவர் கோயிலுக்குப் போகும்போது தெரியும். குடியரசுத் தலைவராக இருந்தா லும், வெளியேதான் நிற்கவேண்டும். கருவறைக்குள் செல்ல முடியாது. அதுதான் சமூக ரீதியானது என்ற வார்த்தைக்கு அர்த்தம். மாறாதது, எனவே, ஜாதியை மாற்ற முடியாது. மாறாதது, ஜாதிதான்.
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள்தான், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வற்புறுத்துகிறோம்!
மதம் மாறலாம், கட்சி மாறலாம்; எதில் வேண்டு மானாலும் மாறலாம். ஆனால், இந்து மதத்தில் பிறந்து விட்டால், ஒரு ஜாதி உண்டு. ஜாதி இல்லாதவன் இந்து மதம் கிடையாது. எனவே, இந்து என்பவன் ஜாதி இல்லாதவனாக இருக்க முடியாது. நீங்கள் கேட்கிறீர்களோ, கேட்கவில்லையோ, ஒப்புக் கொள்கி றீர்களோ, இல்லையோ ஜாதி இருக்கிறது. அதனால்தான், மாறாத ஒன்றை வைத்துக்கொண்டு, அடையாளம் காட்ட வேண்டும். அதனால்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கேட்கிறோம், ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள்தான், அதற்காக ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வற்புறுத்துகிறோம்.
இதில் தெளிவாக இருக்கிறது. Socially and Educationally Backward Class என்று சொல்லிவிட்டு, The Purpose of the Class-I Class-II Expresson Central List means the list of Socially என்று பட்டியல் இருக்கிறது. மத்திய பட்டியல் – ஜாதிவாரியில் ஒரு பட்டியல் வைத்திருக்கிறார்கள். அப்படி? என்ன அர்த்தம்? இதில் தெளிவாக சொல்லிட்டார்கள். The Purpose – எந்தவிதமான குறிப்பு வந்தாலும், சமூகக் கல்வி ரீதியாக என்று இதற்குக் கீழேதான் வருகிறது. ஆகவே, நீங்கள் ஜாதிப் பட்டியலில் உள்ளவை பற்றிப் போய் கேட்டால், அவர்கள் ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி ஜாதிகளைப்பற்றிச் சொல்ல முடியும்.
அம்பாசங்கர் தலைமையில்
ஓர் ஆணையத்தை அமைத்தார்கள்!
ஓர் ஆணையத்தை அமைத்தார்கள்!
எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 1982 ஆம் ஆண்டு அம்பாசங்கர் தலைமையில், ஓர் ஆணையத்தை அமைத்தார். எல்லா ஜாதிக்காரர்களையும் அழைத்து, விசாரணை செய்தது அந்த ஆணையம். ஒவ்வொரு ஜாதி சங்கங்களும், அமைப்புகளும் தங்க ளுக்குக் கூடுதல் சலுகைகளும், அதிக இடஒதுக்கீட்டுப் பங்கீடும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், தங்களின் உண்மையான மக்கள் தொகையை விட பல மடங்கு அதிகமான எண்ணிக்கையை ஆணை யத்திடம் கோரிக்கையாகவும், ஆதாரமாகவும் அளித்தன. அன்றைய ஒருங்கிணைந்த தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 5 கோடியாக இருந்த நிலையில், அனைத்து ஜாதிகளின் தலைவர்களும் தனித்தனியாகக் குறிப்பிட்ட தொகையைக் கூட்டினால் அது 10 கோடிக்கும் மேல் தாண்டியது.
ஆகவேதான், அதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கிற மாதிரி, Socially and Educationally என்று சொல்லிவிட்டு, The purpose of class 1 expression Central List means list of socially and educationally backward classes. Preferred and maintained by Central Government.
பெரியார் கண்ணாடிக்குத் தான் முதலில் தெரியும்!
ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு, நடைமுறையில் இருக்கக்கூடியதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, குயுக்தியாக நீங்கள் உள்ளே போக வேண்டும் என்றால், இது பெரியார் கண்ணாடிக்குத் தான் முதலில் தெரியும். அதனால்தான், நாம் முதலில் எடுத்துச் சொன்னோம். நாம் சொன்ன பிறகுதான், எல்லோரும் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு வேலையே அலாரம் டைம் பீஸ் மாதிரி, ‘டக்கு டக்கு’ என்று அடிப்பதுதான். மணி ஓசைதான் – எழுப்ப வேண்டிய நேரத்தில் எழுப்புவோம்.
ஆகவே நண்பர்களே, சட்டத்தை அமல்படுத்துங்கள் என்று கேட்கிறோம். நீங்கள் போட்ட சட்டத்தை அமல்படுத்துங்கள் என்று சொல்கிறோம். இதை எதனால் நாம் கேட்கிறோம்? இட ஒதுக்கீட்டுக்கு நீதி மன்றத்தில் நீதிபதி என்ன சொல்கிறார்? ‘‘69% இட ஒதுக்கீடா? உங்களுக்கு மக்கள் தொகை அவ்வளவு இருக்காங்களா? சரி, மக்கள் தொகை இருக்கிறார்கள். இதில் மாநில அரசு எடுத்தக் கணக்கீட்டை நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஒன்றிய அரசு சொல்லும் பட்டியலில் இதன்படி இருக்கிறதா?’’ என்று நீதிபதி கேட்கிறார்.
1951 இல் மாணவர்கள் போராட்டத்தை நடத்திய நான், 2026 இலும் அந்தப் போராட்டத்தை நடத்துகிறேன்!
அவர் இவரிடம் அனுப்புவது, இவர் அவரிடம் அனுப்புவது. இந்தச் சாக்குப் போக்கு, இந்தச் சடு குடு விளையாட்டு இத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான், இன்றைக்குத் தொடங்கியது; எப்படி, தந்தை பெரியார் அவர்கள் கம்யூனல் ஜிஓ – வகுப்புவாரி உரிமை செல்லாது என்ற போது, 1951 இல் முதல் குரல் கொடுத்தார். அன்றைக்கு நாங்கள் மாணவர்கள். அன்றைக்கு அந்தப் போராட்டத்தை நடத்தியவன்; இன்றைக்கும் 2026 ஆம் ஆண்டும் போராட்டம் நடத்துகிறேன். ஆகவே, வாழ்நாள் முழுவதும் போராட்டம் எங்கள் இரத்த ஓட்டம். எங்களுக்குப் பதவியோ, மற்றதோ முக்கியமல்ல. எனவேதான், தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றோம். தமிழ்நாடு அரசு இதை வலியுறுத்த வேண்டும். ஏதோ பொத்தாம் பொதுவில் தீர்மானம் போட்டுவிட்டோம்; அதோடு முடிந்து போயிற்று என்று நினைக்கக் கூடாது. தீர்மானம் நிறைவேற்றியதற்குத் தமிழ்நாடு அரசபை் பாராட்டுகிறோம். தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை வரவேற்கிறோம். ஆனால், அதே நேரத்தில், தீர்மானத்தோடு இருக்கக்கூடாது. அந்தத் தீர்மானத்துக்குப் பிறகு அதனை நிறைவேற்றிடச் செய்யவேண்டும். தமிழ்நாட்டில், இதில் கட்சி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயப் பிரச்சினை இது. உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும், இன்றைக்கு நம்ம ஆட்கள் வர முடியாத பெரிய பெரிய உத்தியோகத்தில், இப்பொழுதுதான் நம் ஆட்கள் வருகிறார்கள்.
பார்ப்பனரல்லாதவர்கள் அய்.ஜியாக வருவதற்காகப் போராட்டம் நடத்தினோம்!
முன்பெல்லாம் என்ன முழக்கம் எழுப்பினோம்? ‘‘கான்ஸ்டபிள் எல்லாம் நம்ம ஆளு; அய்ஜி எல்லாம் அவாளா?’’ என்று கேட்டோம். இன்றைக்கு அய்.ஜி.க்கு மேல், டிஜிபியாக வருகிறார்கள் என்றால், எப்படி? மந்திரம் போட்டு வரவில்லை. இந்தப் போராட்டம் போன்று, போராட்டங்களை நடத்தி, வெயிலானாலும், மழையானாலும் போராட்டங்களில் முழக்கம் எழுப்பித்தான் வந்தது. நாம், பார்ப்பனரல்லாதவர்கள் அய்.ஜியாக வருவதற்காகப் போராட்டம் நடத்தினோம்.
நீதிபதிகள் விடாமல் கேட்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படையாக, ‘‘ஜாதிவாரிப் புள்ளி விவரம் இருக்கிறதா, புள்ளி விவரம் இருக்கிறதா?’’ என்று கேட்கிறார்கள்.
ஆகவேதான், புள்ளிவிவரத்தில், புள்ளி வைக்கக்கூடாது. அதுவும் குறுக்குப் புள்ளி வைக்கக்கூடாது. அதைச் சொல்வதற்காகத்தான் இந்த முயற்சி. இது ஒரு தொடக்கம். இந்தியா முழுவம் இந்தத் தீ பரவட்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்த உணர்வுகள் பரவட்டும்! இந்த உணர்வுகள் சட்டபூர்வமாக இருக்கட்டும்.
வெற்றி பெறுகின்ற வரையில்,
எங்கள் போராட்டம் ஓயாது!
எங்கள் போராட்டம் ஓயாது!
நாம் கேட்பது, சட்ட விரோதமான விஷயம் அல்ல. சட்டத்திற்கு ஏற்ப, நீங்கள் நடந்து கொள்ளாததுதான் சட்ட விரோதம். நாங்கள் சட்டத்தைக் காப்பாற்ற முனையக் கூடியவர்கள். சட்டப்படி நடக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய உரிமைகள் எங்களுக்கு உண்டு. அதனால், ஆதாரத்தோடுச் சொல்கிறோம். எனவே, வந்த அனைவருக்கும் நன்றி! தமிழ்நாடு முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. இன்னொரு பெரிய மகிழ்ச்சி, ஒவ்வொரு கட்சியும் ஆரம்பிக்கிறார்கள். நாளைக்குக் காலையில், இதே இடத்தில், எஸ்டிபிஅய் கட்சி நடத்துகின்ற பேரணியைத் தொடங்கி வைக்கிறேன். அதற்குப் பிறகு, 17ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி பெரியார் அய்யா பிறந்தநாளையே தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆகவே, தொடர்ந்து நடக்கும். இது வெற்றி பெறுகிற வரையில் நடக்கும். நாங்கள் அவ்வளவு சீக்கிரம் விடமாட்டோம். நாங்கள் தொடங்கி வைத்தால், தோல்வியில் முடியாது. வெற்றியில் தான் முடியும். பெயர் எங்களுக்கு வேண்டாம்; யார் வேண்டுமானாலும் பெயர் எடுத்துக்கொண்டு போகட்டும். எங்களுக்கு வேண்டியது இந்தப் பிரச்சினை முடிய வேண்டும். அது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினை.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்பட எல்லா பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் கேட்கிறோம்!
எனவேதான், எல்லா பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் கேட்கிறோம். இது வந்தால், பிஜேபிக்காரர் மகனும், பிள்ளைகளும்கூட பயன்படுவார்கள். ஆர்எஸ்எஸ்காரராகத் தப்பிதவறி போயிருக்கிறவர்களுக்கும் இது பயன்படும். பார்ப்பனர்களைத் தவிர.
ஆகவேதான், சூழ்ச்சிகளை – கண்ணிவெடிகளை ஆங்காங்கே புதைத்து வைத்திருப்பது போன்று, ஒவ்வொரு கண்ணி வெடிகளையும் தயாரிக்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று சொல்லி, அனைவருக்கும் நன்றி தெரிவித்து, ஒத்துழைத்த காவல்துறை உள்பட, பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
