நாகை, செப்.16 நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவில் மதநல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் இந்து மதத்தைச் சேர்ந்த இணையர்களுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. பிரசித்தி பெற்ற நாகூர் தர்கா வளாகத்தில் மணமக்களை அமர வைத்து இந்தத் திருமணம் சீரும் சிறப்புடன் நடத்தப் பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரையும் நெகிழ்ச்சி யடையச் செய்துள்ள இந்த நிகழ்வு, சமூக வலைதளங் களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
