சென்னை, செப்.14- தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இது போன்ற டம்மி முதலமைச்சரைப் பார்த்ததில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இது போன்ற டம்மி முதலமைச்சரை நாம் பார்த்ததில்லை. வரலாறு காணாத வகையில் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஆனால், இதைக் கேட்க வேண்டிய முதலமைச்சரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் இருக்கும் இந்த அரசு, விளம்பர மோகத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தவெக அரசு மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் மக்கள் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள் என்றார்.
