டெக்கான் கிரானிக்கல், சென்னை
* தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வின் மூத்த தலைவர்களை விமர்சித்த விஜய்யின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் திமுகவினர் கண்டனப் போராட்டம் நடத்தினர். மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* கல்லூரிகளில் தேர்தல்: 37 ஆண்டுகளுக்குப் பிறகு கருநாடகாவில் மாணவர் தேர்தல் மீண்டும் நடைபெறுகிறது; இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் தேர்தல் நடைபெறும்.
தி டெலிகிராப்
* தனி அறிக்கையை செய்தியாளர் சந்திப்பு எனக் கூறக் கூடாது: ‘செய்தியாளர் சந்திப்பு’ அல்ல, ‘செய்தியாளர் தனிப்பேச்சு’: கேள்விகளை எதிர்கொள்ளாமல் சென்ற யோகி ஆதித்யநாத்தை அகிலேஷ் யாதவ் விமர்சித்தார். பத்திரிகையாளர்களுக்கு கேள்வி கேட்க உரிமை இல்லையெனில், அதை ‘செய்தியாளர் சந்திப்பு’ என்று அழைக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
– குடந்தை கருணா
