பெரியார் மருந்தியல் கல்லூரி மருந்தியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு நூறு சதவீகித வேலைவாய்ப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருச்சி, செப். 13- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டப்படிப்பு (B. Pharm.) மற்றும் பட்டயப்படிப்பு (D. Pharm.) மாணவர்களுக்கான நேர்காண்தேர்வினை பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறையின் மூலம் 25.08.2026 மற்றும் 27.08.2026 முதல் 28.08.2026 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் Apollo Pharmacy, MedPlus Pharmacy மற்றும் Supermed Pharmacy உள்ளிட்ட மூன்று மருந்தியல் நிறுவனங்கள் நடத்தியது.

பட்டயப்படிப்பு மாணவர்கள் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது நடை பெற்ற இந்நேர்காண்தேர்வில் Apollo Pharmacy நிறுவனத்தால் 30 மாணவர்களும் MedPlus Pharmacy நிறுவனத்திடமிருந்து 13 மாணவர்களும் பணிநியமனம் பெற்றனர். மேலும் Supermed Pharmacy நிறுவனத்தின் மூலம் 12 மாணவர்கள் என மொத்தம் கலந்து கொண்ட 55 பேரும் மருந்தியல் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மருந்தியல் பட்டப்படிப்பு மாணவர்கள் 12 பேர் கலந்து கொண்டு அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பணிநியமன ஆணை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்களால் 02.09.2026 அன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெரியார் மருந்தியல் கல்லூரி யின் துணை முதல்வர் முனை வர் கோ. கிருஷ்ணமூர்த்தி, பயிற்சி பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. ச.இராமேேஷ் மற்றும் துணை இயக்குநர் முனைவர் விஜயலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் பட்டப்படிப்பு மாணவர்கள் 12 பேர் பட்டயப்படிப்பு மாணவர்கள் 55 பேர் என மொத்தம் 67 பேருக்கும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. நேர்காண்தேர்வு நடத்திய மருந்தியல் நிறுவனங்கள், பெரியார் மருந்தியல் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் மருந்தியல் சார்ந்த பல்வேறு திறன்களை பெற்றிருப்பதுடன் பணிபுரியும் இடங்களில் அர்ப்பணிப்புணர்வுடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவ தாக தெரிவித்தனர்.

பட்டயப் படிப்பு மாணவர்கள் மருத்துவமனையில் பயிற்சி நிறைவு செய்தவுடன் ரூ.21,000/- மாத ஊதியத்தில் மருந்தாளுநராக பணி நியமனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *